under review

மாலைமாறன்

From Tamil Wiki
Revision as of 00:54, 21 December 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added: Category:புலவர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மாலைமாறன் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று சங்கத்தொகை நூலான குறுந்தொகையில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

மாலைமாறன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். மாறன் என்ற பெயர் பாண்டியர் குடியைக் குறிப்பது. வேந்தர் குடிவழி வந்தவராக இருக்கலாம் என அறிஞர்கள் அவர் பயன்படுத்திய உவமையைக் கொண்டு (வாளரம் போலும் விளிம்புகளையுடைய தாழை) மதிப்பிட்டனர்.

இலக்கிய வாழ்க்கை

மாலைமாறன் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் 245-வது பாடலாக உள்ளது. வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி (தலைவி) உரைத்த கூற்றாக உள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • நெய்தல் திணை - வாள் போல விளிம்புடன்கூடிய கொழுவிய மடலை உடைய தாழை. வரிசையாக வேல்களை நட்டு வைத்த வேலியைப்போல் காக்கும் கடற்கரை.
  • தலைவன் தன் பிரிவால் பசலை நோய்க்கு ஆளான தலைவி அதை நினைத்து வருந்துவதைக் காட்டிலும் தலைவன் தனக்குச் செய்த கொடுமையை ஊரார் காண நேரும் என்பதால் வருந்தினாள்.

பாடல் நடை

  • குறுந்தொகை 245

(திணை: நெய்தல்)

கடலங் கான லாய மாய்ந்தவென்
நலமிழந் ததனினு நனியின் னாதே
வாள்போல் வாய கொழுமடல் தாழை
மாலைவேல் நாட்டு வேலி யாகும்
மெல்லம் புலம்பன் கொடுமை
பல்லோர் அறியப் பரந்துவெளிப் படினே

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Sep-2024, 19:56:32 IST