second review completed

ஓதஞானி

From Tamil Wiki
Revision as of 03:33, 28 April 2025 by Jayashree (talk | contribs)

ஓதஞானி சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

ஓதஞானி சங்க காலப் புலவர்களில் ஒருவர்.

இலக்கிய வாழ்க்கை

ஓதஞானி பாடிய பாடல் குறுந்தொகையில் 227-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. கடற்கரைச் சோலைக்கு தலைவனைத் தேடி தலைவி வருகிறாள். தலைவன் வந்து சென்றுவிட்டதற்கு அடையாளமாக அவனது தேர்சக்கரத்தின் தடம் நெய்தல் மேல் படர்ந்துள்ளதை கொண்டு அறிகிறாள். மறுநாள் தலைவனை சந்திக்கையில் தன்னைக் காணக் காத்திருக்காத தலைவனின் செயலை தலைவி சுட்டிக்காட்டுவதாக தலைவி நெய்தல் திணையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • கடற்கரைச் சோலை பகுதியில் வள்ளிக்கொடியும் நெய்தல் மலர்களும் காணப்படும்.
  • உவமை: தேர் சக்கரத்தின் மேற்புறத்தில் அடிக்கப்படும் கட்டானது உலக்கையின் இரும்பு பூணோடு உவமை காட்டப்பட்டது.

பாடல் நடை

குறுந்தொகை - 227
  • திணை: நெய்தல்
  • கூற்று:சிறைப்புறம்

பூண்வனைந் தன்ன பொலஞ்சூட்டு நேமி
வாண்முகந் துமிப்ப வள்ளிதழ் குறைந்த
கூழை நெய்தலு முடைத்திவண்
தேரோன் போகிய கான லானே.

உசாத்துணை



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.