under review

திருநகரி நடேச பிள்ளை

From Tamil Wiki
Revision as of 13:51, 17 November 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected Category:வாத்திய இசைக்கலைஞர்கள் to Category:வாத்திய இசைக்கலைஞர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
நடேச என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: நடேச (பெயர் பட்டியல்)

திருநகரி நடேச பிள்ளை (1910 - நவம்பர் 15, 1980) ஒரு தவில்கலைஞர்.

இளமை, கல்வி

சீர்காழிக்கு அருகே உள்ள திருநகரியில் 1910-ம் ஆண்டு ஸ்வாமிநாத பிள்ளை - தில்லையம்மாள் இணையருக்கு நடேச பிள்ளை பிறந்தார்.

நடேச பிள்ளை முதலில் சீர்காழி சோமசுந்தரம் பிள்ளையிடம் தவிற்கலையைக் கற்றார். இரண்டாண்டு பயிற்சிக்குப் பின் கும்பகோணம் தங்கவேல் பிள்ளையிடம் மூன்றாண்டுகள் பயிற்சி எடுத்துக் கொண்டார்.

தனிவாழ்க்கை

நடேச பிள்ளையுடன் பிறந்தவர்கள் ஐந்து சகோதரர்கள், இரண்டு சகோதரிகள்:

  • முத்துக்கிருஷ்ண பிள்ளை (நாதஸ்வரம்)
  • கோவிந்தஸ்வாமி பிள்ளை (தவில்)
  • ராமையா பிள்ளை (நாதஸ்வரம்)
  • வேதவல்லியம்மாள் (கணவர்: திருக்கடவூர் கிருஷ்ணமூர்த்தி பிள்ளை)
  • சின்னத்தம்பி பிள்ளை (விவசாயம்)
  • ராமானுஜம் பிள்ளை (தவில்)
  • ஜனகவல்லி அம்மாள் (கணவர்: தரங்கம்பாடி அப்பாஸ்வாமி)

நடேச பிள்ளை சிதம்பரத்தருகே பரதூரைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர் மஹாதேவ பிள்ளையின் மகள்கள் செல்லம்மாள், மங்களத்தம்மாள் இருவரையும் திருமணம் செய்தார். இவரது பிள்ளைகள்:

  • கலியமூர்த்தி (தவில்)
  • நாகராஜன்
  • ஷண்முக வடிவேல்
  • கல்யாணசுந்தரம்
  • விஸ்வநாதன்
  • சகுந்தலா (கணவர்: தவில் கலைஞர் பந்தணைநல்லூர் ராஜேந்திரன்)
  • சாந்தா ராணி
  • பானுமதி
  • கிரிஜா

இசைப்பணி

நடேச பிள்ளை பல பட்டங்களும், 1972-ல் டி.என்.ஆர் விழாவில் கோபுரம் பொறித்த வெள்ளிக் கேடயமும், 1972-ம் ஆண்டு தமிழ்நாடு இயலிசை நாடக மன்றம் வழங்கிய 'கலைமாமணி’ பட்டமும், 1979-ம் ஆண்டு தமிழ்நாடு இயலிசை நாடக மன்றம் வழங்கிய பொற்கிழியும் பெற்றவர்.

உடன் வாசித்த கலைஞர்கள்

திருநகரி நடேச பிள்ளை கீழே தரப்பட்டுள்ள கலைஞர்களுக்குத் தவில் வாசித்திருக்கிறார்:

மாணவர்கள்

திருநகரி நடேச பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:

  • ஏத்தாப்பூர் கிருஷ்ணன்
  • கேரளா தாமோதரன்

மறைவு

திருநகரி நடேச பிள்ளை நவம்பர் 15, 1980 அன்று காலமானார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 18-Jun-2023, 07:02:44 IST