அப்துல் ரகுமான் ஆலிம் புலவர்
- ரகுமான் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ரகுமான் (பெயர் பட்டியல்)
- அப்துல் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: அப்துல் (பெயர் பட்டியல்)
- ஆலிம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஆலிம் (பெயர் பட்டியல்)
அப்துல் ரகுமான் ஆலிம் புலவர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து சிற்றிலக்கியப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
அப்துல் ரகுமான் ஆலிம் புலவர் இலங்கை மட்டக்களப்பினைச் சார்ந்த அட்டாளைச் சேனை என்னும் ஊரில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்தார். தமிழிலும் அரபு மொழியிலும் புலமையுடையவர். முஸ்லிம் மதஞானிகளுக்குப் பொதுவான ஆலிம் என்னும் பெயரை இட்டுக்கொண்டார்.
இலக்கிய வாழ்க்கை
அப்துல் ரகுமான் ஆலிம் புலவர் மணமங்கலமாலை பாடற்தொகுதியை பாடினார். பல தனிப்பாடல்களை இயற்றினார். இவரைப் பேணி புரவலராக விளங்கியவர் அக்கரைப் பற்றினைச் சேர்ந்த மஹ்மூது போடி என்பவர். அவருடைய பெயரினைத் தமது பாடல்களில் "வள்ளல்" என குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். நபிநாயகம்(ஸல்) அவர்களின் புதல்வியாராகிய பீபி பாத்திமாவுக்கும் அலி (ஜலி) அவர்களுக்கும் நடந்த திருமணச் சிறப்பினைச் சொல்லுகின்ற ”மணமங்கலமாலை" என்னும் நூலினை இவர் இயற்றினார். தனிப் பாடல்கள் பல இயற்றினார். இவை அச்சேறவில்லை.
மறைவு
அப்துல் ரகுமான் ஆலிம் புலவர் 1850-ல் காலமானார்.
நூல் பட்டியல்
- சமண மங்கலமாலை
- மணமங்கலமாலை பாடற்தொகுதி
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- ஆளுமை:அப்துல் ரகுமான் ஆலிம் புலவர்: நூலகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
08-Dec-2022, 13:28:52 IST