under review

குணசாகரர்

From Tamil Wiki
Revision as of 11:32, 16 November 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected தமிழ்ப்புலவர் to தமிழ்ப் புலவர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

குணசாகரர் (பொ.யு. 11-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். அமிர்தசாகரரின் காரிகை இலக்கணத்திற்கு உரை செய்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

குணசாகரர் பொ.யு. 11-ம் நூற்றாண்டில் வாழ்ந்தார். அமிர்தசாகரரின் மாணவர் இவர். சமண மதத்தவர்.

இலக்கிய வாழ்க்கை

குணசாகரர் இலக்கண நூலுக்கு உரை செய்த ஆசிரியர்களில் ஒருவர். தன் ஆசிரியர் அமிர்தசாகரர் இயற்றிய யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை நூல்களுக்கு இவர் உரை எழுதியுள்ளார். களத்தூர் வேதகிரி முதலியார்(1851), தில்லையம்பூர் சந்திர சேகர கவிராச பண்டிதர்(1853), உடுப்பிட்டி ஆ. சிவசம்புப்புலவர்(1893), கா.ர. கோவிந்தராச முதலியார்(1934), ந.மு. வேங்கடசாமி நாட்டார்(1940), மே.வீ. வேணுகோபாலபிள்ளை(1968) ஆகியோர் யாப்பெருங்கலக்காரிகையை குணசாகரரின் உரையுடன் பதிப்பித்தனர்.

உரைப்பயன்

  • யாப்பாராய்தல்
  • யாப்பாராயவே பா, தாழிசை, துறை, விருத்தங்களால் ஆக்கப்பட்ட அறம் பொருள் இன்பம் வீடு என்னும் இவற்றின் மெய்மை அறிந்து, விழுப்பம் எய்தி, இம்மை மறுமை வழுவாமல் திகழ்வர்.
  • இருமைக்கும் உறுதி பயப்பது யாப்பு

சான்று

  • யாப்பருங்கலம்

யாப்பருங் கலனணி யாப்புற வகுத்தோன்
தனக்குவரம் பாகிய தவத்தொடு புணர்ந்த
குணகடற் பெயரோன் கொள்கையில் வளாத்
துளக்கறு கேள்வித் துகடீர் காட்சி
அளப்பறுங் கடற்பெய ரருந்தவத் தோனே

நூல் பட்டியல்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Aug-2023, 18:09:32 IST