தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

From Tamil Wiki
Revision as of 22:42, 6 September 2024 by Jeyamohan (talk | contribs) (Created page with "தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (1975) (தமுஎச, தமுஎகச) தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் இடதுசாரி கலை இலக்கிய அமைப்பு. இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்ஸிஸ்ட...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (1975) (தமுஎச, தமுஎகச) தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் இடதுசாரி கலை இலக்கிய அமைப்பு. இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்ஸிஸ்ட்) யின் கிளை அமைப்பு. தமிழகமெங்கும் கிளைகள் கொண்டது. தொடர்ச்சியாக கலையிலக்கிய விழாக்களை ஒருங்கிணைத்து வருகிறது

தொடக்கம்

இந்திய அளவில் என்னும் பண்பாட்டு அமைப்பு மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் கொள்கைகளைப் பரப்பும்பொருட்டு உருவாக்கப்பட்டது. அதை முன்மாதிரியாகக் கொண்டு தமிழகத்திலும் அவ்வண்ணம் ஓர் அமைப்பை உருவாக்கவேண்டும் என்னும் எண்ணம் 11 ஜூலை 1975 அன்று மதுரையில் நடைபெற்ற செம்மலர் இதழின் எழுத்தாளர்கள் மாநாட்டில் உருவானது. அதன்படி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (தமுஎச) என்னும் அமைப்பு உருவானது, பின்னர் இதில் கலைஞர்களும் சேர்க்கப்பட்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது.