பிரபந்தத் திரட்டு
From Tamil Wiki
Revision as of 16:31, 18 April 2022 by Tamaraikannan (talk | contribs)
பிரபந்தத் திரட்டு (பொ.யு 18-ஆம் நூற்றாண்டு) சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் வகுக்கும் பாட்டியல் நூல்களில் ஒன்று. தமிழிலுள்ள சிற்றிலக்கியங்களைத் திரட்டிக் கூறும் நூல். 18-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது.
நூல் அமைப்பு
இந்நூலில் 532 பாடல்கள் உள்ளன. இதன் திருத்தப் பதிப்பு 1980-ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. இதில் சிற்றிலக்கியங்கள் பலவற்றுக்கு இலக்கணம் கூறப்பட்டுள்ளது. அத்துடன் எழுத்து, சொல், தானம்(இடம்), பால், உண்டி, வருணம், நாள், கதி, கணம், முதலான பொருத்தங்களும் அதில் கூறப்பட்டுள்ளன.
உள்ளடக்கம்
- திரட்டியல்
- புறநடையியல்
- கருப்பொருளியல்
- பொருத்தவியல்
- உவமாரூட வியப்பு சார்வியல்
- விசேடவணி வியப்பு சார்வோரியல்
- சாதிமரபு சார்வோரியல்
- குறுநில வியப்பு சார்வோரியல்
- ஒழிபியல்
- கொடையியல்
உசாத்துணை
- வாழ்வியற் களஞ்சியம். தொகுதி 12
- தமிழ் இலக்கண நூல்கள், முனைவர் ச. வே. சுப்பிரமணியன் பதிப்பு, 2007
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.