standardised

தொன்னூல் விளக்கம்

From Tamil Wiki
தொன்னூல்

தொன்னூல் விளக்கம் (1730) தமிழ் இலக்கண நூல். வீரமாமுனிவர் எழுதியது. பிற்காலத்தைய சில இலக்கண நெறிகள் இதிலுள்ளன. வீரமாமுனிவர் கொண்டுவந்த மொழிச்சீர்திருத்தங்களும் உள்ளன.

பார்க்க தென்னூல்

எழுத்து, பதிப்பு

தொன்னூல் விளக்கம் வீரமாமுனிவர் 1730-ல் எழுதியது. நெடுங்காலம் சுவடிகளில் இருந்த இந்நூலை 1838-ஆம் ஆண்டில் பாண்டிச்சேரியில் இருந்து களத்தூர் வேதகிரி முதலியார் முதன்முறையாகப் பதிப்பித்தார். ஐந்திலக்கணம் கூறும் இந்நூல் ஐந்திலக்கணத் தொன்னூல் விளக்கம் என்றும் குறிப்பிடப்படுவது உண்டு.

பதிப்புகள்
  • புதுவையில் களத்தூர் வேதகிரி முதலியார்(1838)
  • நாகையில் அமிர்தநாதர்(1864)
  • ஜி.மென்கன்சி காபின் அய்யர்(1891)
  • செயிண்ட் ஜோசப் அச்சகத்தின் யாகப் பிள்ளை(1898 .
  • ச.வே.சுப்பிரமணியன்(1978)

அமைப்பு

இந்நூல் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை:

  1. எழுத்ததிகாரம்
  2. சொல்லதிகாரம்
  3. பொருளதிகாரம்
  4. யாப்பதிகாரம்
  5. அணியதிகாரம்

மொத்தம் 370- பாக்களால் ஆன இந்நூலின் எழுத்ததிகாரத்தில் 40- பாடல்களும், சொல்லதிகாரத்தில் 102- பாடல்களும், பொருளதிகாரத்தில் 58 பாடல்களும், யாப்பதிகாரத்தில் 100- பாடல்களும், அணியதிகாரத்தில் 70- பாடல்களும் உள்ளன

தொன்னூல்

சிறப்புகள்

  • எ,ஒ வடிவம் புள்ளியிட்டால் குறிலாகவும் இடாவிட்டால் நெடிலாகவும் வழங்குதல்.
  • கட்டளைக்கலிப்பா, சந்தவிருத்தம் ஆகியவற்றின் இலக்கணங்களைக் கூறல்.
  • அகத்திணை, புறத்திணைகளை ஒரே நூற்பாவில் தொகுத்துரைத்தல்.

உரைகள்

இந்நூலுக்கு நூலாசிரியரே உரையும் எழுதியுள்ளார். இவ்வுரையில் பழந்தமிழ் நூல்களிலிருந்தும், தானே எழுதிய பிற நூல்களிலிருந்தும் எடுத்துக்காட்டுப் பாடல்களை ஆசிரியர் தருகிறார். பின்னர் ச.வே.சுப்ரமணியன் விரிவான உரை எழுதியிருக்கிறார்

பதிப்புகள்

  • தொன்னூல் விளக்கம், பதிப்பாசிரியர்: ச. வே. சுப்பிரமணியன், சென்னை (1978)
  • ஐந்திலக்கணத் தொன்னூல் விளக்கம், கிறித்தவத் தமிழ்த் தொண்டர் கான்ஸ்டன்சியஸ் பெஸ்கி என்னும் வீரமாமுனிவர், கழக வெளியீடு, சென்னை, (1984-முதற் பதிப்பு)

உசாத்துணைகள்



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.