கமலா சுப்ரி

கமலா சுப்ரி (1911 - 1993) இந்திய சுதந்திரப்போராட்டத்தில் பங்கு கொண்டார். கோவை சுப்ரியின் மனைவி.
வாழ்க்கைக் குறிப்பு
பொள்ளாச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் மற்றும் ஆசிரியராக இருந்த ஏ. நடேச ஐயரின் மகள் கமலா. நவம்பர் 14, 1926-ல் கோவை சுப்ரியை மணந்தார். மகன் கிருஷ்ணமூர்த்தி.
இந்திய சுதந்திரப் போராட்டம்
கமலா தனது ஆறு மாத மகளுடன் 1930-ல் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றார். முனிசிபல் அலுவலகம் முன் சிறை தண்டனையும் பெற்றார். 1932-ல் தனது தோழிகளான பத்மாவதி ஆஷர் (திருப்பூர்), அம்புஜம் ராகவாச்சாரி, முத்துலட்சுமி (சத்தியமங்கலம்), கோவிந்தம்மாள் அய்யாமுத்து, கமலா கிருஷ்ணசாமி ஆகியோருடன் சத்தியாகிரகத்தில் பங்கேற்றதற்காக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
மறைவு
கமலா சுப்ரி 1993-ல் காலமானார்.
உசாத்துணை
- அறுநூறு ஆண்டுகள் அடிமைப்பட்டு இருந்த நிலையில் , போராடி விடுதலை பெற்ற தமிழர்கள் - kalirajathangamani
- The life of Kovai Subri - The Hindu
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.