under review

வாயுறைவாழ்த்து

From Tamil Wiki
Revision as of 16:08, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வாயுறைவாழ்த்து தமிழ்ச் சிற்றிலக்கிய வகைமைகளில் ஒன்று. சிற்றிலக்கியங்களின் சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம்.

சான்றோர், அரசனுக்கு நன்மை தரும்,உறுதிப்பொருள்களைக் கூறி, "பின்னர்ப் பயன்படும் என் பேச்சு" என நெறிப்படுத்தலும், வாழ்த்தலும் வாயுறை வாழ்த்து எனப்படும். வாயுறைவாழ்த்து மருட்பாக்களால் அமையும்.

பின்பயக்கும் எம்சொல்என
முற்படர்ந்த மொழிமிகுந்தன்று (கொளு.32)

வேப்பங்காயும் கடுக்காயும் கசப்பும் துவர்ப்பும் கொண்டதாக இருந்தாலும் அவை மருத்துவ நன்மையை அளிப்பது போல மெய்ப்பொருளாகிய அறம் கசப்பான சொற்களில் கூறப்பட்டாலும் பின்னர் பெரிதும் பயன் தரும் என முத்துவீரியம் கூறுகிறது

கடுவும் வேம்பும் கடுப்பன ஆகிய
வெஞ்சொல் தாங்க மேவாது ஆயினும்
பின்னர்ப் பெரிதும் பயன்தரும் என்ன
மெய்ப்பொருள் அறம் அருட் பாவால் விளம்புதல்
வாயுறை வாழ்த்தென வைக்கப் படுமே.
- முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 159

அவ்வாறு நெறிப்படுத்தும் பாடல்களைக் கொண்ட சிற்றிலக்கியங்கள் வாயுறை வாழ்த்து என்ற வகைமையைச் சேர்ந்தவை. இளவேட்டனார் என்ற புலவர் திருவள்ளுவமாலையில் திருக்குறளை 'வாயுறை வாழ்த்து' எனக் குறிப்பிடுகிறார். திருக்குறள் அரசர்களுக்குரிய நீதிகளைக் கூறுவதால் அப்படிக் குறிப்பிட்டிருக்கலாம்.

உசாத்துணை

இவற்றையும் பார்க்கவும்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2023, 16:33:22 IST