108 சிவ தாண்டவ விளக்கம்-பிரமரகம்
From Tamil Wiki
உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.
108 சிவ தாண்டவ விளக்கம் - பிரமரகம்
சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று பிரமரகம். தமிழில் இது 'வண்டாட்டு' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்தி எட்டாவது கரணம்.
சிவனின் ஆடல்
திரிகபாதத்தால் வளைந்து நின்று, இடது கையை அஞ்சிதமாக அமைத்து வலது கையைச் சதுரமாக வைத்து நின்று ஆடுவது திரிகம். வளைந்த காலைத்தூக்கி, ஊன்றிய காலைச் சிறிது மடக்கி முழந்தாள்கள் ஸ்வஸ்திகம் போல அமையும்படி வைத்து நிற்பது பிரமரகம்.
உசாத்துணை
- 108 ஆடலியக்கத் தமிழ் பெயரீடும் அமைவுகளும், முனைவர் போ.தெய்வநாயகம், அ.வடிவுதேவி, சு.விசுவநாதன், பதிப்புத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், முதல் பதிப்பு, 2004.
- நாட்டியக் கலை விளக்கம்: சுத்தானந்த பாரதியார்
- 108 SHIVA THANDAVAM PHOTOS
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
09-Oct-2023, 09:37:04 IST