மங்களாசாசனம் பெற்ற வைணவத் திருத்தலங்கள்

From Tamil Wiki
Revision as of 23:51, 27 November 2023 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மங்களாசாசனம் என்றால், ‘மங்கல வாழ்த்து' என்று பொருள். திருமால் ஆலயத்தையோ அல்லது ஆலயத்தில் குடிகொண்டுள்ள மூலவரையோ புகழ்ந்தும், வாழ்த்தியும் ஆழ்வார்கள் பல பாடல்களைப் பாடினர். இவ்வாறு பன்னிரு  ஆழ்வார்களால் பாடப்பட்ட வைணவத் தலங்கள் 108. இவை 108 திவ்விய  தேசங்களாகப் போற்றப்படுகின்றன.

ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த வைணவத் திருத்தலங்கள்

எண் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் ஆலய முகவரி மங்களாசாசனம் செய்த ஆழ்வார்
1 வேளுக்கை அருள்மிகு அழகிய சிங்கர் திருக்கோயில், வேளுக்கை, காஞ்சிபுரம் பேயாழ்வார்
2 கபிஸ்தலம் அருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில், கபிஸ்தலம், தஞ்சாவூர் திருமழிசை ஆழ்வார்
3 அன்பில் அருள்மிகு வடிவழகிய நம்பி திருக்கோயில், அன்பில்,  திருச்சி திருமழிசை ஆழ்வார்
4 ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோயில் (நவ திருப்பதி), ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி நம்மாழ்வார்
5 நத்தம் அருள்மிகு விஜயாசனப் பெருமாள் திருக்கோயில் (நவ திருப்பதி), வரகுணமங்கை, நத்தம், தூத்துக்குடி நம்மாழ்வார்
6 திருப்புளியங்குடி அருள்மிகு காசினி வேந்தன் திருக்கோயில், (நவ திருப்பதி), திருப்புளியங்குடி, தூத்துக்குடி நம்மாழ்வார்
7 திருத்தொலைவில்லி மங்கலம் அருள்மிகு  ஸ்ரீநிவாசன் திருக்கோயில்(நவ திருப்பதி), இரட்டைத் திருப்பதி , தூத்துக்குடி நம்மாழ்வார்
8 திருத்தொலைவில்லி மங்கலம் அருள்மிகு அரவிந்தலோசனன் திருக்கோயில், (நவ திருப்பதி), இரட்டைத் திருப்பதி, தூத்துக்குடி நம்மாழ்வார்
9 பெருங்குளம் அருள்மிகு ஸ்ரீநிவாசன் திருக்கோயில், (நவ திருப்பதி), பெருங்குளம், தூத்துக்குடி நம்மாழ்வார்
10 தென்திருப்பேரை அருள்மிகு மகர நெடுங்குழைக்காதர் திருக்கோயில்(நவ திருப்பதி), தென்திருப்பேரை, தூத்துக்குடி நம்மாழ்வார்
11 திருக்கோளூர் அருள்மிகு வைத்த மாநிதிப் பெருமாள் திருக்கோயில் (நவ திருப்பதி), திருக்கோளூர், தூத்துக்குடி நம்மாழ்வார்
12 வானமாமலை அருள்மிகு தோத்தாத்ரி நாதன் திருக்கோயில், நாங்குனேரி, திருநெல்வேலி நம்மாழ்வார்
13 திருப்பதிசாரம் அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில், திருப்பதிசாரம், நாகர்கோவில், கன்னியாகுமரி நம்மாழ்வார்
14 திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில், திருவட்டாறு, கன்னியாகுமரி நம்மாழ்வார்
15 திருவனந்தபுரம் அருள்மிகு  அனந்த பத்மநாபன் திருக்கோயில், திருவனந்தபுரம், கேரள மாநிலம் நம்மாழ்வார்
16 ஆரம்முளா அருள்மிகு  திருக்குறளப்பன் திருக்கோயில், திருவாறன் விளை, பந்தனம் திட்டா, கேரள மாநிலம் நம்மாழ்வார்
17 திருவண்வண்டூர் அருள்மிகு பாம்பணையப்பன் திருக்கோயில், திருவண்வண்டூர், ஆழப்புழா, கேரள மாநிலம் நம்மாழ்வார்
18 திருக்கடித்தானம் அருள்மிகு அற்புத நாராயணன் திருக்கோயில், திருக்கடித்தானம், கோட்டயம்,  கேரள மாநிலம் நம்மாழ்வார்
19 திருக்காக்கரை அருள்மிகு காட்கரையப்பன் திருக்கோயில், திருக்காக்கரை, எர்ணாகுளம், கேரளா மாநிலம் நம்மாழ்வார்
20 திருச்செங்குன்றூர் அருள்மிகு  இமையவரம்பன் திருக்கோயில்,செங்கனூர், திருச்சிற்றாறு, ஆழப்புழா, கேரள மாநிலம்) நம்மாழ்வார்