மண்டயம் சீனிவாசாச்சாரியார்

From Tamil Wiki
Revision as of 10:58, 16 November 2023 by Jeyamohan (talk | contribs)
மண்டயம் சகோதரர்கள்
மண்டயம் பார்த்தசாரதி ஐயங்கார்

மண்டயம் சீனிவாசாச்சாரியர் (மண்டயம் ஶ்ரீனிவாசாச்சாசரியார், மண்டயம் ஶ்ரீநிவாஸாச்சாரியார்) இந்திய சுதந்திரப்போராட்ட வீரர். இதழாளர். சி.சுப்ரமணிய பாரதியாரின் தோழர். புதுச்சேரியில் இருந்து இந்தியா என்னும் இதழை நடத்தினார். மண்டயம் சகோதரர்கள் என திருமலாச்சார், ஶ்ரீனிவாசாச்சார், பார்த்தசாரதி அழைக்கப்படுகிறார்கள். புதுச்சேரி சகோதரகள் என்றும் அழைக்கப்படுவதுண்டு.

பிறப்பு, கல்வி

மண்டயம் ஶ்ரீனிவாசாச்சாரியார் புகழ்பெற்ற மண்டயம் மரபு என்னும் தென்கலை வைணவ பெருங்குடும்பத்தில் தோன்றியவர். மண்டயம் சகோதரர்கள் என மண்டயம் திருமலாச்சாரியார், ஶ்ரீனிவாசாச்சார், பார்த்தசாரதி அழைக்கப்படுகிறார்கள். புதுச்சேரி சகோதரகள் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இவர்கள் புதுச்சேரியில் வாழ்ந்தனர்

தனிவாழ்க்கை

மண்டயம் சீனிவாசாச்சாரியாரின் மகன் மண்டயம் பார்த்தசாரதி ஐயங்கார் சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்து தன் 104 வயதில் 12 ஏப்ரல் 2021 ல் காலமானார்.

இதழியல்

மண்டயம் சீனிவாசாச்சாரியார் இந்தியா (இதழ்) வெளியீட்டாளர் என்னும் வகையில் அறியப்படுகிறார்.

இலக்கியப் பணிகள்

மண்டயம் ஶ்ரீனிவாசாச்சாரியார் வவ.வே.சு ஐயரையும் பாரதியாரையும் ஒப்பிட்டு 1942 மார்ச் கலைமகள் இதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

உசாத்துணை

the grand wise oldman bids adieu at 104 !! Triplicane is sad !!!