under review

குன்றூர்கிழார் மகனார் கண்ணத்தனார்

From Tamil Wiki
Revision as of 20:11, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)

To read the article in English: Kundrurkilar Makanar Kannathanar. ‎


குன்றூர்கிழார் மகனார் கண்ணத்தனார் சங்க காலப் புலவர். இவர் எழுதிய இரண்டு பாடல்கள் நற்றிணை, புறநானூற்றில் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

குன்றூர் நாட்டில் (தற்போதைய வேதாரண்யம் வட்டம்) குன்றூர்கிழார் மகனாகக் கண்ணத்தனார் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

காஞ்சித்துறை தழுவிய புறப்பாடல் ஒன்றையும், குறிஞ்சித்திணை சாந்த அகப்பாடல் ஒன்றையும் பாடினார். நற்றிணையிலும் (332); புறநானூற்றிலும் (338) இரண்டு பாடல்களைப் பாடினார்.

பாடல்வழி அறியவரும் செய்திகள்
  • நெடுவேளாதான் என்ற அரசனுக்குரிய போந்தை நகர் ஏர்கள் உழுத வயலையும், நீர் நிறைந்த கழனியையும், நெல் நிரம்பிய வீடுகளையும், பொன் நிறைந்த தெருக்களையும், வண்டுகள் ஒலிக்கும் சோலைகளையுடைய மலர்களையும் கொண்டது.
  • அரசர்கள் சென்னியில் வேம்பு, ஆர், போந்தை என்னும் மூன்று பூக்களைத் தம் குடியின் அடையாளப் பூக்களாக அணிவர் என்ற செய்தியை இப்பாடல்வழி அறியலாம்.

பாடல் நடை

  • நற்றிணை: 332

இகுளை தோழி! இஃது என் எனப்படுமோ-
குவளை குறுநர் நீர் வேட்டாங்கு,
நாளும்நாள் உடன் கவவவும், தோளே
தொல் நிலை வழீஇய நின் தொடி' எனப் பல் மாண்
உரைத்தல் ஆன்றிசின், நீயே: விடர் முகை,
ஈன் பிணவு ஒடுக்கிய இருங் கேழ் வயப் புலி
இரை நசைஇப் பரிக்கும் மலைமுதல் சிறு நெறி,
தலைநாள் அன்ன பேணலன், பல நாள்,
ஆர் இருள் வருதல் காண்பேற்கு,
யாங்கு ஆகும்மே, இலங்கு இழை செறிப்பே?

  • புறநானூறு: 338

ஏர் பரந்த வயல், நீர் பரந்த செறுவின்,
நெல் மலிந்த மனைப், பொன் மலிந்த மறுகின்,
படுவண்டு ஆர்க்கும் பன்மலர்க் காவின்,
நெடுவேள் ஆதன் போந்தை அன்ன,
பெருஞ்சீர் அருங்கொண் டியளே ; கருஞ்சினை
வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்
மலைந்த சென்னியர், அணிந்த வில்லர்,
கொற்ற வேந்தர் தரினும், தன்தக
வணங்கார்க்கு ஈகுவன் அல்லன்- வண் தோட்டுப்
பிணங்கு கதிர்க் கழனி நாப்பண், ஏமுற்று
உணங்குகலன் ஆழியின் தோன்றும்
ஓர்எயில் மன்னன் ஒருமட மகளே!

உசாத்துணை


✅Finalised Page