under review

கோகயம்

From Tamil Wiki
Revision as of 10:27, 14 February 2022 by Madhusaml (talk | contribs) (category & stage updated)

கோகயம் (1975- 1976) திருவனந்த புரத்தில் இருந்து வெளிவந்த சிற்றிதழ். இலக்கிய விமர்சகர் ராஜமார்த்தாண்டன் தன் நண்பர்களுடன் சேர்ந்து நடத்தியது.

வரலாறு

ஆகஸ்ட் 1975இல் அ. திருமாலிந்திரசிங், ராஜமார்த்தாண்டன், அ.ராஜேந்திரன், ஆ. தசரதன் ஆகியோர் சேர்ந்து திரு மாலிந்திரசிங் ஆசிரியர் பொறுப்பில் கோகயம் என்ற இருமாதம் ஒருமுறை வெளிவரும் சிற்றிதழைத் தொடங்கினார்கள். எம். வேதசகாயகுமார் அதனுடன் தொடர்பு கொண்டிருந்தார்.

கோகயத்தில் நகுலன், ஷண்முக சுப்பையா, உமாபதி, காசியபன், பிரமிள், வெங்கட் சாமிநாதன், தேவதேவன், கலாப்ரியா, நித்திலன் போன்றோரின் கவிதை – கட்டுரைகள் வெளிவந்துள்ளன. பிரமிள் எழுதிய ‘பட்டறை’ விமர்சனக் கவிதை கல்வித்துறையாளர்களை கண்டிப்பது. அதை வெளியிட ராஜமார்த்தாண்டன் விரும்பினார், மற்றவர்கள் எதிர்த்தனர். ஆகவே நான்காவது இதழுடன் பிப்ரவரி 1976இல் கோகயம் வெளியீடு நிறுத்தப்பட்டது.

திருமாலிந்திர சிங் இலங்கையைச் சேர்ந்தவர். இலங்கை சென்றபின் கோகயம் இதழின் இரண்டு இலக்கங்களை தனியாக வெளியிட்டார்.

உசாத்துணை

எழுத்து முதல் கொல்லிப்பாவை வரை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.