under review

இரா. கந்தசாமியார்

From Tamil Wiki
Revision as of 17:02, 28 June 2023 by Logamadevi (talk | contribs)
இரா. கந்தசாமியார் (நன்றி: மு. இளங்கோவன்)

இரா. கந்தசாமியார் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) தமிழறிஞர். தொல்காப்பியத்திற்குக் குறிப்புரை எழுதினார், தணிகைப்புராண உரையாசிரியர், விபுலாநந்த அடிகளாரின் நண்பர்.

வாழ்க்கைக் குறிப்பு

இரா. கந்தசாமியார் முரம்பு கூமாப்பட்டியில் இராமசாமித்தேவருக்கு மகனாகப் பிறந்தார். இரா. கந்தசாமியார் அண்ணன், அம்மா ஆகியோருடன் முரண்பட்டு, இளம் வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். பல ஊர்களில் தங்கிக் கல்வி பயின்று பணியாற்றினார். இறுதியில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்றார். பணி ஓய்வுக்குப்பின் தனக்கு இளம் வயதில் அடைக்கலம் தந்த சோழவந்தான் கிண்ணிமடம் சென்று தங்கினார்.

இலக்கிய வாழ்க்கை

இரா. கந்தசாமியார் தொல்காப்பியத்திற்குக் குறிப்புரை எழுதினார், தணிகைப்புராண உரையாசிரியர்.

நினைவிடம்

சோழவந்தானில் இரா. கந்தசாமியாரின் நினைவிடம் உள்ளது.

மறைவு

இரா. கந்தசாமியார் சோழவந்தான் கிண்ணிமடத்தில் காலமானார்.

நூல்பட்டியல்

  • தொல்காப்பியம் குறிப்புரை
  • தணிகைப்புராணம் உரை

உசாத்துணை


✅Finalised Page