கல்லாடனார்
கல்லாடனார் தமிழ்க் கவிஞர்கள் ஏழுபேர் இப்பெயரால் குறிக்கப்படுகிறார்கள். கல்லாடம் என்னும் ஊரைச்ச்சேர்ந்தவர், அங்குள்ள தெய்வத்தின் பெயரைச் சூட்டிக்கொண்டவர் முதற் கல்லாடனார். அவர் கடைச்சங்க காலத்தவர். பின்னர் வந்தவர்கள் அப்பெயரைச் சூட்டிக்கொண்டவர்கள். அவருடைய குடிவழி வந்தவர்களோ, மாணவவழி வந்தவர்களோ, நூல்வழி வந்தவர்களோ ஆக இருக்கலாம். அல்லது அப்பெயர் சூட்டிக்கொண்டிருக்கலாம்
கல்லாடம்' என்ற ஒரு திருப்பதி திருவாசகத்தில் போற்றப் பெறுகிறது. இதைப் பாண்டிய நாட்டுப் பழம்பதிகளுள் ஒன்று எனவும், மேற்குக் கடற்கரையில் கொல்லத்துக்கு அருகில் இருந்த ஓர் ஊர் எனவும், வேறு வேறு கூறுவர்; வீரசைவ ஞானாசிரியர்களுடைய மரபு ஒன்று 'ஹல்லட' என வழங்கப் பெறுவதாகவும், ஒருகால் 'கல்லாடர்' என்ற பெயரோடு ஒற்றுமையுடையதாக இருக்கக் கூடும் என்றும்
பொயு 2 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு சங்க காலத்தில் வாழ்ந்தவர்.
இவர் சைவத் திருமுறைகளில் 11 ஆம் திருமுறையான ‘திருக்கண்ணப்ப தேவர் திருமறம்’ பாடியவர். பொயு 9 அல்லது 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்
கல்லாடர் (பொயு 11-12 ஆம் நூற்றாண்டு)
முருகப் பெருமான்மீது கல்லாடம் என்னும் நூல் பாடியவர்
தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர். பொயு 15-16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்
- தொல்காப்பிய உரையாசிரியர் கல்லாடர்
- கல்லாடம் நூறு பாடிய கல்லாடர்.
- கல்லாடர், பாட்டியல் இலக்கணம் செய்த புலவர்
- திருவள்ளுவ மாலையில் உள்ள பாடலைப் பாடிய கல்லாடர் என்னும் போலிப்புலவர்.