under review

ஆ. பூவராகம் பிள்ளை

From Tamil Wiki
Revision as of 13:11, 22 December 2025 by Boobathi (talk | contribs)

To read the article in English: A. Poovaragam Pillai. ‎

ஆ.பூவராகம் பிள்ளை

ஆ. பூவராகம் பிள்ளை (நவம்பர் 27, 1899 - மே 28, 1973) தமிழறிஞர், இலக்கண ஆய்வாளர். பதிப்பாசிரியர். தொல்காப்பியத்தை 1954-ம் ஆண்டு பதிப்பித்தார்.

பிறப்பு, கல்வி

ஆ. பூவராகம் பிள்ளை 27 நவம்பர் 1899-ல் சிதம்பரத்தில் பிறந்தார்.

தனிவாழ்க்கை

பூவராகம் பிள்ளை சிதம்பரத்தில் உள்ள இராமசாமி செட்டியார் நகர உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கினார். பின்னர் அண்ணாமலை அரசர் கல்லூரியில் விரிவுரையாளராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

இலக்கியப்பணி

பூவராகம் பிள்ளை தொல்காப்பிய சொல்லதிகார சேனாவரையம் உரையில் உள்ள பல கடினமான பகுதிகளுக்கு எளிய நடையில் உரை எழுதி சேனாவரையர் உரை விளக்கம் என்ற நூலை வெளியிட்டார். இந்நூலில் ஒவ்வொரு நூற்பாவின் பொருளையும் எளிமையாக விளக்கியுள்ளார்.

விருதுகள்

ஆகஸ்ட் 16, 1930-ல் காசிமடம் இவரது இலக்கணப் புலமையைப் பாராட்டி பரிசளித்தது

மறைவு

மே 28, 1973-ல் மரணமடைந்தார்.

இலக்கிய இடம்

ஆ. பூவராகம் பிள்ளை தமிழ் தொல்லிலக்கிய நூல்களை பொருள்கொள்ளும் பணி நிகழ்ந்த காலகட்டத்தில் பங்களிப்பாற்றிய முன்னோடி அறிஞர்களில் ஒருவர். தொல்காப்பியத்தை சொல்லாய்வுடன் விளக்கியவர் என்னும் நிலையில் புகழ்பெற்றிருந்தார்.

நூல்கள்

  • சேனாவரையர் உரைவிளக்கம்
  • திருவாய்மொழி விளக்கம்
  • திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
  • புலவர் பெருமை
  • தொல்காப்பியம் நூலடைவு

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 12:06:31 IST