சீரங்கநாயகியார் ஊசற்றிருநாமம்
சீரங்கநாயகியார் ஊசற்றிருநாமம் அஷ்டபிரபந்தத்தில் இடம்பெறும் ஊசல் என்னும் சிற்றிலக்கியம். கோனேரிராஜனைய்யங்காரால் இயற்றப்பட்டது.
ஆசிரியர்
சீரங்கநாயகியார் ஊசற்றிருநாமம் இயற்றியவர் கோனேரியப்பனையங்கார். இவர் அஷ்ட பிரபந்தம் இயற்றிய பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் பெயரர் என்பது தவிர அவரைப் பற்றிய வேறு தகவல்கள் அறியவரவில்லை.
நூல் அமைப்பு
திருமாலை வாழ்த்தி, ஆதிசேஷனையும், கருடாழ்வாரையும், அடுத்து நித்ய சூரிகளுக்குத் தலைவராக விளங்கும் விஷ்வக்சேனரையும் வாழ்த்தியபின் ஆழ்வார் பதின்மரைக் வாழ்த்தியபின், ஒற்றைச் சக்கரத் தேர் கொண்ட சூரியன், சந்திரன் இம்மண்ணுலகம் எல்லாம் வாழ வேண்டும் என்று முதல் பாடல் வாழ்த்துகிறது. ஊஞ்சலின் அழகையும், அதில் ஆடும் தாயாரின் அழகும் பாடப்பட்டுள்ளதி. நம்மாழ்வார், நாதமுனிகள், ராமானுஜர், கூரத்தாழ்வார் போன்ற அடியார்களின் வாழ்க்கை பற்றிய குறிப்புகளுடன், சீரங்கநாயகியாரைச் சூழ்ந்துள்ளோர் இப்பாடலில் குறிக்கப்படுகின்றனர். பத்துவகைக் கொத்தினர் . உடையவர் திருவரங்கம் திருக்கோயில் நிர்வாகத்தைத் திறம்பட நிர்வகிக்கப் நியமனம் செய் பத்துவகைக் கொத்தினர் பற்றிக் கூறப்படுகிறது. இவர்களைப் பற்றிக் கோவில் ஒழுகு நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் எழுதியுள்ள சீரங்கநாயகர் ஊசற்றிருநாமம் நூலின் 22-ஆம் பாடலிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதியில் எம்பெருமானின் “ஆழி, சங்கு, கதை, சிலை, வாள் எனும் பஞ்சாயுதங்களுக்கும் பல்லாண்டு பாடப்படுகிறது. திருமாலின் இந்த ஐந்து படைக்கலங்களையும் ஆழ்வார்கள் பல அருளிச்செயல்களில் அனுபவித்துள்ளனர்.
சீரங்கநாயகியாரைச் சூழ்ந்துள்ளோர் இப்பாடலில் குறிக்கப்படுகின்றனர். முதலில் பத்துவகைக் கொத்தினர் காட்டப்படுகின்றனர். உடையவர் சீரங்கம் திருக்கோயில் நிருவாகத்தைத் திறம்பட நிர்வகிக்கப் பத்துக் கொத்துகளை நியமனம் செய்து அருளினார். அவர்களைப் பற்றிக் கோவில் ஒழுகு நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்நூலாசிரியரின் பாட்டனாரான பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் எழுதியுள்ள “சீரங்க நாயகர் ஊசல்” நூலின் 22-ஆம் பாடலிலும் இதைக் காணமுடிகிறது. மூன்றாம் பாடல் பிராட்டியார் ஊசல் ஆடும்போது பிராட்டியாரின் திருவுருவில் அமைந்திருக்கும் அணிகலன்கள் ஆடும் அழகைச் சுட்டிக் காட்டுகிறது. ’ஆட’ ‘ஆட’ என்று ஒவ்வோர் அடியிலும் ஓசைநயத்துடன்
பாடல் நடை
தருக்குடனே உமதுதிரு வுளத்துக் கேற்கத்
தங்கள்தங்கள் பணிவிடைகள் தலைமேற் கொண்டு
வருக்கமுடன் பத்துவகைக் கொத்து ளோரும்
மற்றுமுள்ள பரிகரமும் வந்து சூழ
அருக்கனென முடிவிளங்க அழகு வீற
அண்டர்கள் பூமழை பொழிய அடியார் போற்ற
செருக்கி விளையாடி உகந்து ஆடிர் ஊசல்
சீரங்கநாயகியார் ஆடிர் ஊசல்
நாதமுனி தவமாக மாறன் பாட
நயந்தெழுத வேதன்எழுத் தழிந்த வாறும்
போதன் எதிராசன் வளையாழி மண்ணோர்
புயத்தெழுதக் கூற்றினெழுத் தழிந்த வாறும்
ஏதமில் கூரத்தாழ்வான் பதக்குண் டென்றே
எழுதிட வாதியர்கள் எழுத்தழிந்த வாறும்
தீதில் குணத்தடியார்கள் திரண்டு வாழ்த்தச்
சீரங்க நாயகியார் ஆடிர் ஊசல்
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.