under review

மோதாசனார்

From Tamil Wiki
Revision as of 19:00, 5 March 2025 by Logamadevi (talk | contribs)

மோதாசனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூறில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

மோதாசனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.

இலக்கிய வாழ்க்கை

மோதாசனார் பாடிய பாடல் குறுந்தொகையில் 229 -ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. சிறு வயதில் ஒருவருடனொருவர் தீராது சண்டையிட்டு கொண்ட தலைவனும் தலைவியும் மணம் செய்து கொண்டு ஒருவரையொருவர் பிரியாது பாலை நிலத்தின் வழியே பயணம் செய்வதை கண்ட ஊராரின் கூற்றாக பாலைத் திணையில் அமைந்துள்ள பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • அருகருகே பக்கத்து வீடுகளில் வாழும் ஆண் பிள்ளையும் பெண் பிள்ளையும் சண்டையிட்டுக் கொள்வர். அச்சண்டை சிறுமியின் கூந்தலை சிறுவன் பிடித்திழுக்கவும், அச்சிறுவனின் தலையை வளைத்து கீழ்நோக்கி சிறுமி அழுத்தவும் விடாப்பிடியாக தொடரும். இருவரது செவிலித்தாய்மார்களும் அவர்களது சண்டையை நீக்க மிக்க சிரமத்திற்கு ஆளாவர்.
  • உவமை: தலைவனும் தலைவியும் மணமக்களாய் இருப்பது, மென்மையான இரண்டு வகையான பூக்களை தொடுத்து உருவாக்கி இணைபிரியாத அழகிய மாலையை ஒத்துள்ளது.

பாடல் நடை

குறுந்தொகை - 229

  • திணை: பாலை துறை:இடைச் சுரத்துக் கண்டார்,தம்முள்ளே சொல்லியது.

இவனிவ ளைம்பால் பற்றவும் இவளிவன்
புன்றலை யோரி வாங்குநள் பரியவும்
காதற் செவிலியர் தவிர்ப்பவுந் தவிரா
தேதில் சிறுசெரு வுறுப மன்னோ
நல்லைமன் றம்ம பாலே மெல்லியல்
துணைமலர்ப் பிணைய லன்னவிவர்
மணமகிழ் இயற்கை காட்டி யோயே.

உசாத்துணை

‎


✅Finalised Page