being created

பவித்ரா ஸ்ரீநிவாசன்

From Tamil Wiki
பவித்ரா ஸ்ரீனிவாசன்
பவித்ரா சீனிவாசன்
பவித்ரா சிற்றோவியம். Harbour View Royapuram

பவித்ரா ஸ்ரீநிவாசன் ( Pavithra Srinivasan) ( பிறப்பு 1981- மறைவு 15 ஜூலை 2021) (பவித்ரா சீனிவாசன்). இதழாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நூல்தொகுப்பாளர். வரலாற்றாய்வில் ஆர்வம் கொண்டவர். குழந்தைகளுக்கான நூல்களை எழுதினார். ஆங்கில இந்து நாளிதழ் குழந்தைகள் பக்கத்தில் எழுதி வந்தார்.கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் ஆகிய நாவல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர்களில் ஒருவர்

ஓவியம்

பவித்ரா சீனிவாசன் மெட்ராஸ் மினியேச்சர் எனப்படும் சிற்றோவியக் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தார். நூல்களுக்கு ஓவியம் வரைவதிலும் ஈடுபட்டிருந்தார்

வேளாண்மை

பவித்ரா இயற்கைவேளாண்மையில் ஆர்வமுடையவர். தொடர்ந்து அதில் ஈடுபட்டிருந்தார்.

சொற்பொழிவு

பவித்ரா சொற்பொழிவாளர். இயற்கை வேளாண்மை மற்றும் இலக்கியம், சென்னை நகரவரலாறு ஆகியவை சார்ந்த உரைகள் ஆற்றிவந்தார்.

எழுத்துக்கள்

  • பவித்ரா ஸ்ரீநிவாசன் தி ஹிந்து ஆங்கில நாளிதழின் குழந்தைகளுக்கான இணைப்பில் Yester Tales என்னும் தலைப்பில் வரலாற்றுக் கட்டுரைகள் எழுதினார்.
  • திருவண்ணாமலை அருகே ஒரு சிற்றூரில் இயற்கை வேளாண்மை செய்து வரும் பவித்ரா அந்த அனுபவங்களை நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் How I Met My Farm என்ற பெயரில் எழுதினார்
  • rediff.com இதழில் இசை விமர்சனங்கள் எழுதினார்
  • Southscope, Ritz and Inbox1305 ஆகிய இதழ்களில் திரை விமர்சனங்கள் எழுதினார்
  • Eves Touch இதழில் பெண்களின் வாழ்க்கைமுறை பற்றி எழுதிவந்தார்
  • Culturama magazine இதழில் Passage to India என்ற தலைப்பில் வரலாற்று குறிப்புகளை எழுதியிருக்கிறார்

மொழியாக்கப்பணிகள்

பவித்ரா Katha India அமைப்புக்காக தமிழ் படைப்புகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், இமையம் போன்றவர்களின் கதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். கிராஸ் வேர்ட் பரிசின் நெடும்பட்டியலில் மொழியாக்கத்துக்காக இடம்பெற்றிருக்கிறார்.

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலையும் 2014லும் சிவகாமியின் சபதம் நாவலை 2012லும் பவித்ரா மொழியாக்கம் செய்திருக்கிறார் அமிஷ் திரிபாதியின் ஆங்கில நாவல்களை தமிழாக்கம் செய்திருக்கிறார்

மறைவு

பவித்ரா சீனிவாசன் 15 ஜூலை 2021ல் கொரோனாவால் உயிரிழந்தார்.

நூல்கள்

  • Yester Tales (Viswakarma Publications, 2017
  • Little-Known Tales from Well-Known Times: Back to the BCs, (Helios Books, 2012
  • Swords and Shadows (Pustaka Digital Media, 2016)
  • Harshavardhana (Pustaka Digital Media, 2016)
ஆங்கில மொழியாக்கங்கள்
  • Sivakamiyin Sabadham (Helios Books, 2012; Tranquebar Press, 2015)
  • Ponniyin Selvan (Tranquebar Press, 2014; Zero Degree Publications, 2019; Taar Maar Productions, 2019).
  • They Came; They Conquered- Madhan(Zero Degree Publications, 2018)
  • Lock Up (Westland, 2017)
தமிழ் மொழியாக்கங்கள்
  • முடிவில் ஒரு திருப்பம் ஜெஃப்ரி ஆர்ச்சர் சிறுகதைகள் (Westland, 2009)
  • சிவா முத்தொகுதி. -அமிஷ் திரிபாதி
  • இக்‌ஷுவாகு குலத்தோன்றல்-அமிஷ் திரிபாதி
  • சீதா மிதிலைப் போர்மங்கை-அமிஷ் திரிபாதி

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.