under review

சின்ன ஆலிம் அப்பா

From Tamil Wiki
Revision as of 18:21, 27 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected the links to Disambiguation page)
அப்பா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: அப்பா (பெயர் பட்டியல்)
ஆலிம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஆலிம் (பெயர் பட்டியல்)

சின்ன ஆலிம் அப்பா (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் சிற்றிலக்கியப் புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சின்ன ஆலிம் அப்பா இலங்கை யாழ்ப்பாணம் மாதகல் என்னும் ஊரிலே பிறந்தார். இந்தியாவிலுள்ள வேதா சகாயத்துக்குச் சென்று பஞ்சலக்கணக் கணபதி ஐயரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். திரும்பி வந்து தமது ஊரில் வாழ்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

சின்ன ஆலிம் அப்பா கண்டி மன்னன் மீது 'கிள்ளைவிடு தூது' என்னும் பிரபந்தம் ஒன்றை இயற்றி அரங்கேற்றுவதற்காக அவனிடம் சென்றார். அம்மன்னன் ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டான் என்ற செய்தியை வழியில் கேள்விப்பட்டு தம் ஊருக்குத் திரும்பினார்.

மாணவர்கள்
  • இருபாலைச் சேனாதிராய முதலியார்
  • அராலி அருணாசலம்பிள்ளை

நூல் பட்டியல்

  • கண்டி மன்னன் கிள்ளைவிடு தூது

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Mar-2023, 06:17:26 IST