திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்

From Tamil Wiki
Revision as of 17:02, 31 October 2024 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ( 1856) ராபர்ட் கால்டுவெல் எழுதிய மொழியியல் நூல். A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages என்ற தலைப்பில் ஆங்கிலத்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ( 1856) ராபர்ட் கால்டுவெல் எழுதிய மொழியியல் நூல். A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. தென்னிந்தியாவில் பேசப்பட்ட மொழிகளின் இலக்கண அமைப்பை ஒப்பிட்டு அவை ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்று கால்டுவெல் இந்நூலில் நிறுவுகிறார். அவற்றை திராவிட மொழிகள் என்று அடையாளப்படுத்துகிறார். பின்னாளில் தென்னிந்தியாவில் திராவிட அரசியல்பார்வை உருவாக அடித்தளமிட்ட நூல் இது.

எழுத்து வெளியீடு

ராபர்ட் கால்டுவெல் A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் இந்நூலை எழுதினார். இதன் முதல்பதிப்பு 1956ல் வெளிவந்தது. இரண்டாவது திருத்தியபதிப்பு லண்டனில் உள்ள டர்ப்னர் அண்ட் கோ நிறுவனத்தாரால் 1875 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் பின் தொடர்ச்சியாக ஆய்வுப்பதிப்புகள் பல வெளியாகியுள்ளன.

இந்நூலை தமிழில் காழி. கண்ணுசாமிப்பிள்ளை, கா.அப்பாத்துரை ஆகியோர் 1941ல் முதலில் மொழியாக்கம் செய்தனர். பின்னர் பல மொழியாக்கங்கள் வெளியாகியுள்ளன.

உள்ளடக்கம்

கிளாஸ்கோ பல்கலையில் மொழியியல் பயின்றவரான கால்டுவெல் தென்னிந்தியாவில் பேசப்பட்ட 9 மொழிகளை ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் கண்டார். இவற்றை திராவிட மொழிகள் என அடையாளப்படுத்தினார். ஏற்கனவே பிரான்ஸிஸ் வைட் எல்லிஸ் தென்னிந்திய மொழிகள் சம்ஸ்கிருதம் அல்லாத ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை, அவற்றை திராவிட மொழிகள் என்று சொல்லலாம் என அடையாளப்படுத்தியிருந்தார். கால்டுவெல் விரிவான மொழியியல் சான்றுகளின் அடிப்படையில் திராவிட மொழிகள் தங்களுக்கான தனித்த இலக்கணம் கொண்டவை என்று நிறுவினார்.

உசாத்துணை