under review

நந்தவனம்

From Tamil Wiki
Revision as of 10:18, 6 May 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Reviewed by Je)
நந்தவனம்

நந்தவனம் (1940) பெண்களுக்கான தமிழ் இருமாத இதழ். தமிழில் வெளிவந்த தொடக்ககால பெண்களுக்கான இதழ்களில் ஒன்று. நாவலாசிரியையும் விடுதலைப்போராட்ட வீரருமான வை.மு.கோதைநாயகி அம்மாள் இதன் ஆசிரியர்

வெளியீடு

தாரண வருடம் ஆடிமாதம் ஜகன்மோகினி பிரசுரத்தின் வெளியீடாக வெளியிடப்பட்டு, மகளிருக்காக வெளிவந்த இருமாத இதழ். இது நந்தவனத்தின் இரண்டாவது இதழ். "திறமையுள்ள சகோதரிகள் எழுத்துலகில் வெற்றி பெறவேண்டும்" என்பதை இலக்காகக் கொண்டு சிங்கப்பெருமாள் கோயில் ஜகன்மோகினி அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டது. இதழ்களில் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் எழுதியிருக்கிறார்கள்

உள்ளடக்கம்

வை.மு.கோதைநாயகி அம்மாள் 'ஜகன் மோகினி'யின் துணை வெளியீடாக 'நந்தவனம்' என்ற இதழையும் வெளியிட்டு அதன் மூலம் 150-க்கும் மேற்பட்ட பெண் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். பிற்காலத்தில் புகழ் பெற்ற எழுத்தாளர்களாக விளங்கிய வசுமதி ராமசாமி, குகப்ரியை, குமுதினி, கமலா சடகோபன், ரங்க நாயகி, ஆர்.சூடாமணி போன்றவர்கள் இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் குகப்ரியை 'கிரக லட்சுமி' மற்றும் மங்கை' ஆசிரியராகவும், கமலா சடகோபன் 'மங்கையர் மலர்' ஆசிரியராகவும் பொறுப்பேற்றனர்.

உசாத்துணை


✅Finalised Page