first review completed

காந்தி (இதழ்)

From Tamil Wiki
காந்தி

காந்தி (1931) தமிழில் வெளிவந்த அரசியல் - இலக்கிய இதழ். டி.எஸ்.சொக்கலிங்கம் இதை நடத்தினார். சுதந்திரப்போராட்டச் செய்திகளை முதன்மையாக வெளியிட்டது. இலக்கியப்படைப்புகளும் வெளிவந்தன

வெளியீடு

டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு, சென்னையிலிருந்து வெளிவந்த வாரம் இருமுறை இதழ் இது. காலணா விலை கொண்டது 25000 பிரதிகள் வரை விற்பனை ஆகியது.

உள்ளடக்கம்

வ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாற்றின் இரண்டாம் பகுதி, வ.ராமசாமி ஐயங்கார் எழுதிய மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு ஆகியவை காந்தி இதழில் தொடராக வெளியிடப்பட்டவை. புதுமைப்பித்தன் எழுதிய முதல் கதை குலோப்ஜான் காதல் காந்தி இதழில் வெளியானது. திருக்குறளின் ஆங்கில மொழியாக்கமும் காந்தி இதழில் வெளியிடப்பட்டது.

நிறுத்தம்

சுதந்திரப் போராட்டத்தில் காந்தி இதழ் தீவிரமாக ஈடுபட்டது. 1932-ல் காந்தி கைது செய்யப்பட்டதை எதிர்த்து ராஜகோபாலாச்சாரியார் எழுதிய அறிக்கை காந்தியில் வெளியிடப்பட்டது. இதழ் பறிமுதல் செய்யப்பட்டு நூறு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. டி.எஸ்.சொக்கலிங்கம் ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை பெற்றார். வார இருமுறை இதழாகவும் நாளிதழாகவும் மாத இதழாகவும் காந்தி வெளிவந்தது. 1934-ல் பிகார் நிலநடுக்கம் ஏற்பட்டது. பலர் உயிரிழந்தனர். போதிய நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை எனக் கருதிய டி.எஸ்.சொக்கலிங்கம் ‘சர்க்கார் எங்கே?’ என்ற கடுமையான கண்டனக் கட்டுரையை எழுதினார். ராஜத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டார். காந்தி தடை செய்யப்பட்டது 1934-க்குப்பின் காந்தி வெளிவரவில்லை.

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.