being created

இளசை சுந்தரம்

From Tamil Wiki
Revision as of 19:44, 3 July 2024 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
இளசை சுந்தரம்

இளசை சுந்தரம் (இளசை எஸ். சுந்தரம்; முனைவர் இளசை சுந்தரம்; டாக்டர் இளசை சுந்தரம்) (ஜூலை 16, 1946 - டிசம்பர் 20, 2021) கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், பட்டிமன்ற நடுவர். மதுரை அகில இந்திய வானொலி மற்றும் மதுரை பொதிகைத் தொலைக்காட்சி இயக்குநராகப் பணியாற்றினார். தமிழக அரசின் கலைமாமணி விருது, மகாகவி பாரதியார் விருது உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

இளசை சுந்தரம் தூத்துக்குடியைச் சேர்ந்த எட்டையபுரத்தில், A. சீனிவாசன் - S. சீனியம்மாள் இணையருக்கு ஜூலை 16, 1946 அன்று பிறந்தார். எட்டையபுரத்தில் பள்ளிக் கல்வி கற்றார். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் பயின்று பி.ஏ., பி.எட் பட்டம். பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பயின்று எம்.ஏ. பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

இளசை சுந்தரம் மணமானவர். மனைவி: முனைவர் ரேவதி சுப்புலட்சுமி.

ஊடகம்

வானொலி

இளசை சுந்தரம், தமிழகத்தின் பல்வேறு வானொலி நிலையங்களில் பணியாற்றினார். சென்னை வானொலியின் கல்வி ஒலிபரப்புப் பிரிவில் பணியாற்றினார். திருச்சி வானொலியில் குழந்தைகள் நிகழ்ச்சிக்கான வானொலி அண்ணாவாகவும், இலக்கிய நிகழ்ச்சிகளின் அமைப்பாளராகவும் பணிபுரிந்தார். வானொலி நாடகங்கள் பலவற்றை எழுதி இயக்கினார். 'நகைச்சுவை அரங்கம்’ என்ற நிகழ்ச்சியை நடத்தினார். ‘மொழியாகும் ஒலிகள்’ என்ற புதுமை நிகழ்ச்சியைப் படைத்து அகில இந்தியப் பரிசுடன், ஆகாஷ்வாணி சிறப்பு விருது பெற்றார். தென்கச்சி சுவாமிநாதன் வானொலியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் நடத்திய ‘இன்று ஒரு தகவல்’ நிகழ்ச்சியை ஐந்து ஆண்டுகள் நடத்தினார்.

தொலைக்காட்சி




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.