திருவரங்கத்து மாலை
திருவரங்கத்து மாலை பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றிய அஷ்டப்பிரபந்தத்தில் அடங்கும் எட்டு நூல்களில் ஒன்று,திருவரங்கத்தையும், அரங்கனையும் பாடும் நூல்.
ஆசிரியர்
திருவரங்கத்து மாலையை இயற்றியவர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார். அழகிய மணவாள தாசர், ரங்கநாத தாசர் எனசவும் அறியப்பட்டார்.
நூல் அமைப்பு
மாலை’ என்பது தமிழ்ச் சிற்றிலக்கிய வகைமைகளில் ஒன்று. மலர்களைக் கொண்டு மாலை தொடுப்பது போல ஒரு பொருளை முன்னிட்டு, அப்பொருளைப் பற்றிய பல்வேறு அம்சங்களைக் குறித்து, ஒரே வகைப் பாவைக் கொண்டும், பல்வேறு வகைப் பாக்களையும், பாவினங்களையும் கொண்டும் பாடப்படுவது மாலை. மாலைப் பிரபந்தங்கள் அனைத்தும் தொல்காப்பியத்தின் ‘விருந்து’ எனும் வனப்பு எல்லையுள் அடங்குவன.
திருவரங்கத்து மாலை திருவரங்கத்தையும், அரங்கனையும் பாடிய நூல். காப்பு, இறுதியில் உள்ள தற்சிறப்புப் பாயிரம் நீங்க 111 கட்டளைக்கலித்துறைப் பாடல்களைக் கொண்டது.
பாடல் நடை
= விராட ரூபம்
அடித்தலம் அந்த அதலம் பொரு திரை ஆழி வையம் கடித்தலம் நேமிக்கிரி உடை ஆடை கபாலி முன் நாள் மிடித்து அலமந்தது ஒழித்தான் அரங்கன் விழி இரு கோள் முடித்தலம் அண்ட முகடு இனி யாம் என் மொழிவதுவே –7 </poem>
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.