under review

க. மயில்வாகனப் புலவர்

From Tamil Wiki
Revision as of 20:10, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)

க. மயில்வாகனப் புலவர் (1875-1918) ஈழத்து தமிழ் சிற்றிலக்கியப்புலவர். ஈழத்து கோயில்கள் பற்றி பிரபந்தங்கள் எழுதியவர்.

(பார்க்க மயில்வாகனப் புலவர்)

பிறப்பு, கல்வி

க. மயில்வாகனப் புலவர் இலங்கை யாழ்ப்பாணம் தெல்லிப்பிழை வறுத்தலைவிளானில் இலங்கைநாத முதலியார் மரபில் கணபதிப்பிள்ளை ஆசிரியருக்கு மகனாக 1875-ல் பிறந்தார். இளமையில் தெல்லிப்பிழை அமெரிக்க மிஷன் தமிழ்ப் பாடசாலையில் கல்வி பயின்றார். பன்னிரண்டு வயதிற்குப்பின் தெல்லிப்பழை அமெரிக்க மிஷன் ஆங்கில வித்தியாசாலையில் ஆங்கிலம் கற்றார். யாழ்ப்பாணத்திலுள்ள இந்துக் கல்லூரியில் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பில் சேர்ந்து படித்தார். தமிழ் இலக்கண இலக்கியங்களைத் ஆ. சோமாஸ்கந்த பிள்ளையிடம் பயின்றார்.

தனிவாழ்க்கை

ஆசிரியராகத் தெல்லிப்பழையிலும் மல்லாகத்திலுமுள்ள ஆங்கில வித்தியாசாலைகளில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றினார். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் நோட்டரி (Notary) தேர்வில் வெற்றி பெற்று வட்டுக்கோட்டை மயிலிட்டியில் நோட்டரியாகப் பணியாற்றினார்.

அமைப்புப் பணி

மயிலிட்டியில் "இந்து பரிபாலன சபை" என்ற சபையை நிறுவி தலைவராக இருந்து செயல்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

இருபத்திரண்டு வயதில் இராமநாதபுரத்திலே தங்கியிருந்த உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரைக் காணுவதற்காக இந்தியா சென்றார். சேதுபதி மன்னரைச் சந்தித்தார். மயில்வாகனப் புலவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிற்றிலக்கிய வகைமையில் சிறிய நூல்களை இயற்றினார்

மறைவு

க. மயில்வாகனப் புலவர் 1918-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • இணுவைப் பதிற்றுப் பத்தந்தாதி
  • மயிலை மும்மணிமாலை
  • விநாயகரகவல்
  • மயிலைச் சுப்பிரமணியர் விருத்தம்
  • வைரவர் தோத்திரம்
  • மாவைப்பதிகம்
  • இனுவைப் பதிகம்
  • துணவைப் பதிகம்
  • கீரிமலை நகுலேசுவரர் மீது வினேதசித்திரகவிப்பூங்கொத்து
  • திருநீலகண்டநாயனர் சரித்திரம்(நாடகம்)

உசாத்துணை


✅Finalised Page