being created

தண்டியலங்காரம்

From Tamil Wiki
Revision as of 20:13, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)

தமிழில் ஐவகை இலக்கணங்களான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பவற்றில் அணி இலக்கணத்தை விளக்கி எழுந்த நூல் தண்டியலங்காரம். இந்நூலின் ஆசிரியர் தண்டி என்பவராவார். இஃது உரைதருநூல்களில் ஒன்று. இலக்கணம் இயற்றிய ஆசிரியரே இலக்கணத்துக்கு உரை மேற்கோள்களாகத் தாமே பாடல்களையும் இயற்றி உரையுடன் இணைத்துள்ளார். தமிழ்த் தண்டியலங்காரம் எழுதப்பட்ட காலமாகும் (946-1070)

தொல்காப்பியத்தை அடுத்து அணி இலக்கணம் பயிலப் பெரிதும் பயன்படுவது தண்டியலங்காரம் ஆகும். இது தொல்காப்பியத்தையும், வடமொழி காவியா தரிசத்தையும் அடியொற்றி எழுதப்பட்டது. இக்கருத்தை,

பன்னிரு புலவரில் முன்னவன் பகர்ந்த
தொல்காப் பியநெறி பல்காப் பியத்தும்
அணிபெறும் இலக்கணம் அரிதினில் தெரிந்து
வடநூல் வழிமுறை மரபினில் வழாது

எனவரும் தண்டியலங்காரச் சிறப்புப் பாயிரத்தால் அறியலாம்.

ஆசிரியர்

வடமொழியில் உள்ள அணி இலக்கண நூலாகிய காவியாதரிசம் என்பதன் ஆசிரியர் தண்டி என்பவராவார். தமிழிலுள்ள தண்டியலங்கார அணி இலக்கண நூலின் ஆசிரியர் பெயரும் தண்டி என்றே காணப்படுகிறது. இப்பெயர், இவரது இயற்பெயரா? வடமொழி ஆசிரியர் மீது கொண்ட அன்பால் தாமே வைத்துக் கொண்ட புனைபெயரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அமைப்பு

தண்டி அலங்காரம்

  1. பொதுவியல் (25 நூற்பாக்கள்)
  2. பொருளணியியல்(64 நூற்பாக்கள்)
  3. சொல்லணியியல் (35 நூற்பாக்கள்)

என மூன்று பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியங்களில் காணப்படும் பல்வேறு அணி வகைகளுக்கான இலக்கணங்கள் கூறப்பட்டுள்ளன.

பொதுவியல்

பொதுவியல்,

  1. முத்தகச் செய்யுள்,
  2. குளகச் செய்யுள்,
  3. தொகைநிலைச் செய்யுள் (8 வகைப்படும்)
  4. தொடர்நிலைச் செய்யுள் (2 வகைப்படும்)* சொல் தொடர்நிலைச் செய்யுள் * பொருள் தொடர்நிலைச் செய்யுள்

எனும் நான்கு வகையான செய்யுள்கள் பற்றி விளக்குகிறது. தொடர்நிலைச் செய்யுள் வகை பற்றிக் கூறும்போது அதன் வகைகளான பெருங்காப்பியம், காப்பியம் என்பவற்றின் இலக்கணங்கள் பற்றி இந்நூல் விளக்குகின்றது.

பொருளணியியல்

பொருளணியியலில் 37 அணிகளுக்கான இலக்கணம் கூறப்பட்டுள்ளது.

அணிகள்
1)தன்மை நவிற்சி அணி
2)உவமையணி
3)உருவக அணி]
4)தீவக அணி
5)பின்வருநிலையணி
12)தற்குறிப்பேற்ற அணி
சொல்லணியியல்

சொல்லணியியலில் மடக்கு, சித்திரகவி, வழுக்களின் வகைகள்ஆகியவற்றின் இலக்கணங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

தண்டியலங்கார உரையும் பதிப்பும்

தண்டியலங்காரத்திற்குப் பழைய உரைஒன்று சுப்பிரமணிய தேசிகரால் இயற்றப்பட்டது. இதனை அடியொற்றியே பிற உரைகளும் பதிப்புகளும் தோன்றின. கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தி.ஈ.சீனிவாச ராகவாச்சாரியார், தண்டியலங்காரக் கருத்துகளைத் தொகுத்து, 'தண்டியலங்கார சாரம்’ என்னும் வசன உரைநடை நூலை எழுதியுள்ளார்.இவை இந்நூலின் தனிச்சிறப்புகளாகும்.

வை.மு. சடகோப ராமாநுஜாச்சாரியார் உரை - கி.பி. 1901
இராமலிங்கத் தம்பிரான் குறிப்புரை - கழகம் - கி.பி. 1938
சி.செகந்நாதாச்சாரியார் (சொல்லணி) உரை - கி.பி. 1962
புலவர் கு. சுந்தரமூர்த்தி (பாடபேத உரை) - கி.பி. 1967
புலியூர்க் கேசிகன் எளிய உரை - கி.பி. 1989
வ.த. இராம சுப்பிரமணியம் உரை - கி.பி. 1998


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.