சிக்கல் நாராயணப் பிள்ளை

From Tamil Wiki
Revision as of 17:31, 26 March 2022 by Subhasrees (talk | contribs) (சிக்கல் நாராயணப் பிள்ளை - முதல் வரைவு)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சிக்கல் நாராயணப் பிள்ளை (1880 - 1941) ஒரு தவில் கலைஞர்.

இளமை, கல்வி

நாகப்பட்டிணம் மாவட்டம் சிக்கலில் 1880ஆம் ஆண்டு நாராயணப் பிள்ளை பிறந்தார். இவருடைய பெற்றோர் பெயர் தெரியவில்லை. சிங்காரவேலு என்றொரு மூத்த சகோதரர் இருந்தார்.

தனிவாழ்க்கை

நாராயணப் பிள்ளை மாவூரைச் சேர்ந்த குலோபம்மாள் என்பவரை மணந்தார். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.

இசைப்பணி

கும்பகோணம் சிவக்கொழுந்துப் பிள்ளைக்குத் தவில் வாசித்து வந்த நாராயணப் பிள்ளை சிவக்கொழுந்துப் பிள்ளையின் மறைவுக்குப் பின்னர் தவில் வாசிப்பதை விட்டுவிட்டு கடம் வாசிக்கத் தொடங்கினார். சுமார் முப்பதாண்டுகள் பலருக்கு கடம் வாசித்திருக்கிறார்.

உடன் வாசித்த கலைஞர்கள்

சிக்கல் நாராயணப் பிள்ளை கீழே தரப்பட்டுள்ள கலைஞர்களுக்குத் தவில் வாசித்திருக்கிறார்:

மறைவு

சிக்கல் நாராயணப் பிள்ளை 1941ஆம் ஆண்டில் காலமானார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013