under review

இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள்-2019

From Tamil Wiki
Revision as of 20:09, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
இலக்கியச் சிந்தனை 2019 ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகள்

இலக்கியச் சிந்தனை அமைப்பு பிப்ரவரி 28, 1970-ல் தொடங்கப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இவ்வமைப்பைத் தொடங்கினர். தமிழ் இதழ்களில் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டது. சிறந்த சிறுகதையை எழுதிய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்

இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள் பட்டியல்-2019

சிறுகதைத் தலைப்பு ஆசிரியர் இதழ்
உருவங்கள் மாறலாம்! எஸ். செல்வசுந்தரி தினமணி கதிர்
நட்பு என்பது! நெய்வாசல் நெடுஞ்செழியன் தினமணி கதிர்
திரும்பி வரும் தருணம் ஸிந்துஜா கணையாழி
முறிமுக்கால் கா. சி. தமிழ்க்குமரன் செம்மலர்
மனக்கதவு செருவை நாகராஜன் தினமணி கதிர்
சம்சாரம் இல்லாத சமையலறை கோமதி மணாளன் தினமணி கதிர்
காத்திருப்பு ஜனநேசன் தினமணி கதிர்
சிற்றிதழ் எஸ். ராமகிருஷ்ணன் ஆனந்த விகடன்
உயிர் நீர்! கே.உமாபதி கல்கி
காகிதக் கப்பல் விஜய ராவணன் கணையாழி
மரணம் செய்யாறு தி.தா. நாராயணன் கணையாழி
துர்காவதி ஷைலஜா கலைமகள்

2019-ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதை

2019- ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக, எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ‘சிற்றிதழ்’ தேர்ந்தெடுக்கப்பட்டது. சிவசங்கரி இக்கதையைத் தேர்ந்தெடுத்தார்.

உசாத்துணை

சிற்றிதழ்: இலக்கியச் சிந்தனை 2019-ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகள்: வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை 600017.


✅Finalised Page