108 சிவ தாண்டவ விளக்கம்-லோலிதம்

From Tamil Wiki
Revision as of 22:52, 16 November 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added: Image Added; Link Created: Proof Checked.)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
லோலிதம் (எழிற்சுழல்)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும் கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - லோலிதம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று லோலிதம். தமிழில் இது எழிற்சுழல் என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது நூற்றி ஐந்தாவது கரணம்.

சிவனின் ஆடல்

கைகளை மார்புக்கு நேராக மலர்ந்த தாமரை போல் கால்களை ஸ்வஸ்திகமாக வைத்து, சிறிது சாய்ந்த முகத்தோடு ஆடுவது லோலிதம்.

உசாத்துணை

  • 108 ஆடலியக்கத் தமிழ் பெயரீடும் அமைவுகளும், முனைவர் போ.தெய்வநாயகம், அ.வடிவுதேவி, சு.விசுவநாதன், பதிப்புத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், முதல் பதிப்பு, 2004.
  • நாட்டியக் கலை விளக்கம்: சுத்தானந்த பாரதியார் சுத்தானந்த பாரதியார்
  • 108 SHIVA THANDAVAM PHOTOS