first review completed

மங்கலவள்ளை

From Tamil Wiki
Revision as of 19:38, 5 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)

மங்கலவள்ளை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். உயர்ந்த குலத்துப் பெண்ணை ஒன்பது வெண்பாக்களினால் பாடுவது மங்கலவள்ளை[1][2][3][4].

அடிக்குறிப்புகள்

  1. ஒன்பது வெண்பா வகுப்பால் உயர்குல
    மங்கையைப் பாடுவது மங்கல வள்ளை

    - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 828

  2. மாசில் குலமகளை வகுப்பு வெண்பாவினால்
    வருபொரு ளுரைத்தலாய் ஒன்பதொன்ப
    தாகப் பாடின் மங்கல வள்ளை

    - பிரபந்த மரபியல் - 13

  3. மேற்குலத்திற் பிறந்த மின்னாளை வெண்பா
    ஒன்பதாலும் வகுப்பொன்பதினாலும்
    வழுத்துவது மங்கல வள்ளை யாகும்.

    - முத்து வீரியம் 1111

  4. கோதிலாக் கற்பிற் குலமகளை - நீதிசேர்
    மங்கல வள்ளை வகுப்பொடு வெண்பாவால்
    இங்காமொன் பான்என் றிசை

    - வெண்பாப்பாட்டியல் 54

உசாத்துணை

வெளி இணைப்புகள்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.