first review completed

108 சிவ தாண்டவ விளக்கம்-கரிஹஸ்தகம்

From Tamil Wiki
Revision as of 01:20, 17 October 2023 by Jayashree (talk | contribs)
கரிஹஸ்தகம் (துதிக்கை)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும் கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - கரிஹஸ்தகம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று, கரிஹஸ்தகம். தமிழில் இது 'துதிக்கை' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது எண்பத்தி ஏழாவது கரணம்.

சிவனின் ஆடல்

வலதுகால் குதியைச் சாய்த்து ஊன்றி இடதுகாலைச் சிறிது மடங்க வைத்து, லதா ஹஸ்தமாக அமைத்து ஒரு கையைத் தூக்கி, ஒரு பக்கத்திலிருந்து ஒரு பக்கம் அசைத்து, பின்பு திரிபதாக முத்திரையாகக் காதோரத்தில் ஒரு கையை அமைத்து நின்று ஆடுவது கரிஹஸ்தகம்.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.