being created

காக்கைப்பாடினியார்

From Tamil Wiki
Revision as of 22:39, 17 September 2023 by Tamizhkalai (talk | contribs)

காக்கைப்பாடினியார் காக்கைபாடினியம் என்னும் இலக்கண நூலை எழுதியவர். காக்கைபாடினியார் என்ற பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட புலவர்கள் வாழ்ந்துள்ளனர்.

பார்க்க: காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்

வாழ்க்கைக் குறிப்பு

காக்கைப்பாடினியம் இயற்றிய காக்கைப்படினியார் பொ.யு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். இவரைப் பற்றிய வேறு தகவல்கள் அறியவரவில்லை.

இலக்கிய வாழ்க்கை

காக்கைப்பாடினியார் காக்கைபாடினியம் என்னும் செய்யுள் இலக்கண நூலை இயற்றினார். இந்நூலின் ஒரு பகுதியே இதுவரை கிடைத்துள்ளது.

தொல்காப்பியத்திற்கும் யாப்பருங்கலக்காரிகைக்கும் இடையே இயற்றப்பட்ட பாவியல் நூல்களில் காக்கைபாடினியம் ஒரு சிறந்த இடத்தை வகிக்கிறது. யாப்பருங்கலமும், காரிகையும் இலக்கண நெறிகளில் பெரும்பாலும் காக்கைபாடினியத்தையே பின்பற்றுகின்றன.

தொல்காப்பியர் செய்யுளில் வரும் அசைக்கூறுகளை நேர், நிரை, நேர்பு, நிரைபு என நான்காகப் பகுத்துக் காட்டினார். தொல்காப்பிய வழிவந்த காக்கைப்படினியம் நேர்பு, நிரைபு அசைகளை விலக்கிவிடுகிறது. இதன் வழிவந்த யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை ஆகிய நூல்கள் நேர், நிரை என்னும் இரண்டு அசைகளையே குறிப்பிடுகின்றன. மேலும் நாலசைச்சீர் பற்றிய குறிப்பும் காக்கைபாடினியத்தில் வருகிறது.

யாப்பருங்கல விருத்தியுரை

தொல்காப் பியப்புலவோர் தோன்ற விரித்துரைத்தார்
பல்கா யனார்பகுத்துப் பன்னினார் - நல்யாப்புக்
கற்றார் மதிக்குங் கலைக்காக்கை பாடினியார்
சொற்றார்தம் நூலுள் தொகுத்து

என்று காக்கைபாடினியாரைப் புகழ்ந்துரைக்கிறது.

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.