first review completed

ராஜேஷ்குமார்

From Tamil Wiki
Revision as of 04:18, 25 August 2023 by Jayashree (talk | contribs)
ராஜேஷ்குமார்
எழுத்தாளர் ராஜேஷ்குமார்
எழுத்தாளர் சாண்டியல்யனுடன்

ராஜேஷ்குமார் (கே.ஆர். ராஜகோபால்; கே.ஆர்; ஆர்.கே.; பிறப்பு: மார்ச் 20, 1947) பொதுவாசிப்புக்குரிய குற்றப் புதினங்களை, சமூக நாவல்களை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறார். முழு நேர எழுத்தாளர். 1500-க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார். தனது எழுத்து முயற்சிகளுக்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

பிறப்பு, கல்வி

கே,ஆர். ராஜகோபால் என்னும் இயற்பெயரை உடைய ராஜேஷ்குமார், ரங்கசாமி - கிருஷ்ணவேணி இணையருக்கு, மார்ச் 20, 1947-ல் பிறந்தார். ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை, அறிவியல் கல்லூரியில் தாவரவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். கல்வியியல் கல்லூரியில் பயின்று பி.எட். பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

ராஜேஷ்குமார் ஐந்தாண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். குடும்பச் சூழல்களால் தன் பணியை ராஜினாமா செய்து விட்டு, தந்தை செய்து வந்த கைத்தறிச் சேலை வியாபாரத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். பணி நிமித்தம் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்தார். மனைவி தனலட்சுமி. மகன்கள், கார்த்திக் குமார், ராம் பிரகாஷ். இருவரும் சிறுகதைகள் எழுதியுள்ளனர். பேரன் ஸ்ரீவத்சனும் கதைகள் எழுதி வருகிறார்.

வாடகைக்கு ஓர் உயிர் - முதல் நாவல்
ராஜேஷ்குமார் குடும்பத்தாருடன்

இலக்கிய வாழ்க்கை

ராஜேஷ்குமார், கல்லூரியில் படிக்கும்போது ஆண்டு மலருக்காக ஒரு கதையை எழுதினார். ஆசிரியர்களும், சக மாணவர்களும் அளித்த ஊக்கத்தால் தொடர்ந்து இதழ்களுக்கு எழுதத் தொடங்கினார். கே.ஆர். ராஜகோபால் என்ற பெயரில் ஏற்கனவே ஒரு எழுத்தாளர் இருந்ததால், தனது சகோதரி மற்றும் சகோதரி மகனின் பெயரை இணைத்து, ‘ராஜேஷ்குமார்’ என்ற பெயரில் எழுத ஆரம்பித்தார்.

முதல் சிறுகதை, ‘உன்னை விட மாட்டேன்’, 1969-ல், மாலை முரசு கோவை பதிப்பில் வெளியானது. தொடர்ந்து தமிழின் முன்னணி இதழ்களில் சிறுகதைகள் எழுதினார். முதல் நாவல், ‘வாடகைக்கு ஒர் உயிர்’ 1980-ல், மாலைமதியில் வெளியானது. ’ஏழாவது டெஸ்ட் ட்யூப்’ என்னும் முதல் தொடர்கதை, 1980-ல், கல்கண்டு வார இதழில் வெளிவந்தது.

விவேகானந்தர் மீது கொண்ட ஈடுபாட்டாலும், காவல்துறையில் பணியாற்றிய தன் நண்பர் விவேகானந்தனின் நினைவாகவும் விவேக் என்ற துப்பறியும் கதாபாத்திரத்தை உருவாக்கினார். ராஜேஷ்குமாரின் நாவல்களில் இடம் பெறும் விவேக், ரூபலா, கோகுல்நாத், நவநீதகிருஷ்ணன் போன்ற பாத்திரங்கள் வாசக வரவேற்பைப் பெற்றவை.

1980-லிருந்து 1995 வரை தமிழ்நாட்டில் வெளிவந்த 40-க்கும் மேற்பட்ட மாத நாவல்களில் ராஜேஷ்குமார் தொடர்ந்து எழுதினார். சாவி,(சாவி இதழ்) எஸ்.ஏ.பி. (குமுதம்), மணியன், (இதயம் பேசுகிறது) எஸ். பாலசுப்பிரமணியன் (ஆனந்த விகடன்) போன்றோர் ராஜேஷ்குமார் தொடர்ந்து எழுத ஊக்கமளித்தனர். மோனா, மணியன், மாலைமதி, ராணி முத்து, சுஜாதா, ராணி, விகடன், குமுதம், சாவி, குங்குமம், தேவி, சுபமங்களா, தினமணி கதிர், தினமலர் வாரமலர், குடும்ப நாவல், பாக்கெட் நாவல், த்ரில் நாவல், திகில் நாவல், பெஸ்ட் நாவல், எவரெஸ்ட் நாவல், நாவல் சத்யா என்று தமிழில் வெளியான முன்னணி இதழ்கள் எல்லாவற்றிலும் எழுதினார்.

ராஜேஷ்குமாரின் எழுத்தால் கவரப்பட்ட பத்திரிகை ஆசிரியர் ஜி.ஏ. அசோகன், 1985-ல், ராஜேஷ்குமாருக்காகவென்றே ‘க்ரைம் நாவல்’ என்ற ஒரு மாத இதழைத் தொடங்கினார். அதில் தொடர்ந்து ராஜேஷ்குமாரின் படைப்புகளைக் கடந்த 37 ஆண்டுகளாக, வெளியிட்டு வருகிறார். ’நந்தினி 440 வோல்ட்ஸ்’, ’திக் திக் திவ்யா’, ’திரு மரண அழைப்பிதழ்’, ’இறப்பதற்கு நேரமில்லை’, ’ரத்தம் சிந்தும் ரோஜாக்கள்’, ’உயிரின் நிறம் ஊதா’ என்பது போன்று வித்தியாசமான தலைப்பிட்டு வாசகர்களைக் கவர்ந்தார் ராஜேஷ்குமார். 300-க்கும் மேற்பட்ட நாவல்களை ராஜேஷ்குமார் க்ரைம் நாவலில் எழுதியுள்ளார்.

1998-ல், ராஜேஷ்குமாரின் ஆயிரமாவது நாவலான ’டைனமைட் 98’ குமுதம் வார இதழில் தொடராக வெளியானது. தற்போது வரை 1500-க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார். விஞ்ஞானம் கலந்த க்ரைம் கதைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார்.

’இரண்டாவது தாலி’, ’முள் நிலவு’, ’முதல் பகல்’, ’ஒரு துளிக்கடல்’, ’பாதரசப்பறவைகள்’ போன்றவை அதிகம் வரவேற்கப்பட்ட ராஜேஷ்குமாரின் சமூக நாவல்கள். சித்தர்கள் பற்றியும் ஆராய்ந்து ஒரு நூலை எழுதியுள்ளார். வாசகர்களிடையே பொது அறிவை வளர்க்கும் நோக்கில் இவர் எழுதியிருக்கும் ‘விளக்கம் ப்ளீஸ் விவேக்’, ‘அர்த்தமுள்ள அரட்டை’ போன்ற தொடர்கள் மிகுந்த வாசக வரவேற்பைப் பெற்றவை. புதிய தலைமுறை கல்வி இதழில் இவர் எழுதி, இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து வெளிவந்த கேள்வி-பதில் தொடர் மிகுந்த வாசக வரவேற்பைப் பெற்றது. ’சார் ஒரு சந்தேகம்’ என்ற தலைப்பில் அது நூலாகவும் வெளியானது. அதே இதழில் இவர் எழுதிய, ஐந்தறிவு உயிரினங்கள் பற்றிய ‘வாவ் ஐந்தறிவு’ தொடரும் வரவேற்பைப் பெற்றது. நூலாக வெளிவந்தது. பிஞ்ச் செயலியில், ( ராஜேஷ்குமாரின் ‘நள்ளிரவுச் செய்திகள் வாசிப்பது துர்கா’ நாவலை, 30.05 லட்சம் வாசகர்கள் படித்துள்ளனர் [1].

தன்னுடைய சுயசரிதையை, வாழ்க்கை அனுபவங்களை, ‘என்னை நான் சந்தித்தேன்’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார். ராஜேஷ்குமாரின் சிறுகதைகளும், நாவல்களும் தெலுங்கு, கன்னடம், மலையாள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நாவல்கள் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிளாஃப்ட்’ பதிப்பத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இவருடைய நாவல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துத் சர்வ தேசத் தரத்தில் வெளியிடும் முயற்சியை ஒடிஸி புத்தக நிறுவனத்தார் மேற்கொண்டுள்ளனர். ராஜேஷ்குமாரின் நாவல்கள் சிலவற்றை ஆராய்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் முனைவர். இள முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

நியூயார்க் டைம்ஸில் ராஜேஷ்குமார் பற்றிய குறிப்பு

நியூயார்க் டைம்ஸ், பிப்ரவரி, 2009 இதழில், எழுத்தாளர் ஜியாஃப் நிக்கில்சன் (Geoff Nicholson), ராஜேஷ்குமாரை 45 வருடங்களில், 904 நாவல்களை எழுதி கின்னஸ் சாதனை செய்திருக்கும் Kathleen Lindsay உடன் இணைத்துக் குறிப்பிட்டுள்ளார். அக்கட்டுரையில் ராஜேஷ்குமார் 1500-க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியிருப்பதைப் பதிவு செய்துள்ளார் [2].

சண்டமாருதம் திரைப்படம்
தொலைக்காட்சி, திரைப்படப் பங்களிப்புகள்

ராஜேஷ்குமாரின் 100-க்கும் மேற்பட்ட படைப்புகள் கலைஞர் தொலைக்காட்சியில், ‘சின்னத்திரை சினிமா’ என்ற தலைப்பில், 2013 முதல் 2018 வரை, இரண்டு மணி நேரம் கொண்ட சினிமாவாக ஒளிபரப்பானது. விஜய் தொலைக்காட்சியில் ‘நீ எங்கே என் அன்பே’, ‘இருட்டில் ஒரு வானம்பாடி’, ‘அஞ்சாதே அஞ்சு’ போன்ற தொடர்கள் வெளிவந்தன. சன் தொலைக்காட்சியில் ‘ஊமத்தம் பூக்கள்’ தொடராக வெளிவந்தது. சென்னைத் தொலைக்காட்சியிலும் இவரது நாவல்கள் தொடராக வெளியாகியுள்ளன.

ராஜேஷ்குமாரின் கதைகள் சில திரைப்படங்களாக வெளிவந்துள்ளன. இவரது ‘இரவில் ஒரு வானவில்’ என்ற நாவல், ‘அகராதி’ என்ற பெயரில் திரைப்படமாகியிருக்கிறது. இவர் எழுதிய நாவல்கள், ‘சென்னையில் ஒரு நாள் -2’, ‘குற்றம் 23’, ‘யுத்த சத்தம்’, ‘அக்னிதேவி’, ‘சண்டமாருதம்’ போன்ற தலைப்புகளில் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன.

மகன்கள் கார்த்திக் குமார், ராம் பிரகாஷ் உடன்

பதிப்பகம்

ராஜேஷ்குமாரின் படைப்புகளை வெளியிடுவதற்கென்றே, அவரது மகன் கார்த்திக்குமார், ‘ஆர்.கே. பப்ளிஷிங்'[3] என்ற பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார்.

அச்சுப் புத்தகமாக மட்டுமில்லாமல் புஸ்தகா.இன், அமேசான் கிண்டில், நாவல் ஜங்‌ஷன் போன்ற தளங்கள் மூலம் மின்னூல்களாக ராஜேஷ்குமாரின் புத்தகங்கள் வெளியாகியுள்ளன. ஸ்டோரி டெல் (Storytel) தளம் மூலம் ஒலி வடிவிலும் ராஜேஷ்குமாரின் படைப்புகள் வெளியாகியுள்ளன.

வாழ்நாள் சாதனையாளர் விருது
ராஜேஷ்குமார், ஐம்பதாமாண்டு எழுத்துப் பயண நிகழ்வு விழாவில்...

விருதுகள்

  • தமிழக அரசின் கலைமாமணி விருது
  • சர்வதேச அரிமா சங்கம் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது
  • சேலம் ரீடர்ஸ் ஷிப் ஃபோரம் அமைப்பினர் வழங்கிய சிறந்த எழுத்தாளர் விருது
  • இலக்கியச் சிந்தனை விருது
  • ஒடிஸி நிறுவனம் வழங்கிய ‘எழுத்துச் சிற்பி’ விருது.
  • ‘வாசகர் பேரவை’ வழங்கிய சிறந்த எழுத்தாளர் விருது
  • ரோடரி சங்கம் வழங்க்கிய இளம் சாதனையாளர் விருது
  • சுதேசி இதழ் வழங்கிய ’விஷிஷ்டா’ விருது
  • மிட் டவுன் ரோடரி ஊடகங்கள் வழங்கிய சிறந்த நாவலாசிரியருக்கான விருது
  • ஜேசீஸ் அமைப்பினர் வழங்கிய ‘யுவரத்னா விருது’
  • மென்ஸ் வேர்ல்ட் இதழ் (MW Magazine) வழங்கிய ‘நாவல் சக்கரவர்த்தி’ விருது
  • ஒடிஸியில் எழுத்துச் சுரபி விருது

மற்றும் பல.

இலக்கிய இடம்

பொது வாசிப்புக்குரிய படைப்புகளை மிகச் சுவாரஸ்யமான நடையில் எழுதுபவர் ராஜேஷ்குமார். அதிகம் படிக்காத பாமரனுக்கும் புரியும் வகையில் எழுதுபவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு. இவரை வாசித்து எழுத்துலகில் நுழைந்தவர்கள் பலர். கடந்த 53 ஆண்டுகளுக்கும் மேலாக, காலத்திற்கேற்றவாறு தன்னைப் புதுப்பித்துக் கொண்டு எழுத்துலகில் செயல்பட்டு வருகிறார். இன்றளவும் அதிக வாசகர்களால் வாசிக்கப்படும் பொது வாசிப்புக்குரிய பல படைப்புகளை எழுதி வருகிறார்.

ராஜேஷ்குமாரின் நாவல்களில் சில

நூல்கள்

நாவல்கள்
  • அபாயம் தொடு
  • அபாய நோயாளி
  • அடுத்த இலக்கு
  • அட்வான்ஸ் அஞ்சலி
  • அலுமினியப் பறவைகள்
  • அமிர்தம் என்றால் விஷம்
  • அன்புள்ள எதிரி
  • அந்த அக்டோபர் 14
  • அந்த 69 நாள்கள்!
  • அன்றே! அங்கே! அப்பொழுதே!
  • அங்கே… இங்கே.. எங்கே…?
  • அப்புறம்… அனிதா..?
  • அரை மில்லிலிட்டர் ஆபத்து
  • அருந்ததியும் ஆறு தோட்டாக்களும்…
  • அத்தி பூத்தது
  • அதிகாலைப் பறவைகள்
  • அப்ஜெக்ஷன் யுவர் ஆனர்
  • அவள் ஒரு ஆச்சர்யக்குறி
  • அழகியே தீயே!
  • அகல்யாவின் ஆகாயம்
  • அக்கறையாய் ஒரு அக்கிரமம்
  • அதிரடி ஆட்டம்
  • அதிரும் உதிரம்
  • அது இது எது?
  • அதே நிலா அதே கலா
  • அந்த உயிர் பிரியும் நேரம்
  • அந்த நாள் அந்த நிமிடம் அந்த நொடி
  • அந்த ரத்த நாட்கள்
  • அரை விநாடி அநியாயம்
  • அவிழ மறுக்கும் அரும்புகள்
  • அவென்யு மரங்கள்
  • அன்பே இந்தியா
  • அழகே உனக்கு ஆபத்து
  • அகல்யா
  • அஞ்சாதே அஞ்சு
  • அது ஒரு நிலாக்காலம்
  • அந்த சந்திரனே சாட்சி
  • அபயம் அபாயம் அருணா
  • அமரர் பதவி அக்டோபர்
  • அவசரம் விவேக் அவசரம்
  • அவன் அவள் அவர்கள்
  • அறுபத்தைந்தாவது கலை
  • ஆகஸ்ட் 5 அதிகாலை
  • ஆகஸ்ட் அதிர்ச்சி
  • ஆபத்து இங்கே ஆரம்பம்
  • ஆபத்துக்கு ஒரு அழைப்பிதழ்
  • ஆடாத ஊஞ்சல்கள்
  • ஆகையால் நான் கொலை செய்தேன்
  • ஆர்த்திக்கு ஆபத்து
  • ஆச்சர்யம் ஆனால் உண்மை
  • ஆபத்துக்கு பாவமுண்டு
  • ஆப்பிள் பெண்ணே நீ யாரோ
  • ஆஷா 60 நாள்
  • ஆயுதம் அணி
  • ஆயுள் ஆறே நாள்
  • ஆயுள் அரெஸ்ட்
  • ஆஸ்ட்ரேயில் சில சிகரெட் துண்டுகள்
  • இருட்டில் ஒரு கறுப்புப்பூனை!
  • இன்ப அதிர்ச்சி நிலையம்
  • இங்கேதான் இறப்பார்கள்
  • இனி, இல்லை இலையுதிர்காலம்…
  • இனி மின்மினி
  • இறக்க பிறந்தவள் சிந்து
  • இரண்டாவது தாலி
  • இரண்டில் ஒன்று
  • இரவல் சொர்க்கம்
  • இரவு நேர சூரிய காந்தி
  • இரவு நேர வானவில்
  • இரும்பு பட்டாம்பூச்சிகள்
  • இருட்டில் இரண்டு பேர்
  • இருட்டில் வைத்த குறி
  • இது தடை செய்யப்பட்ட பகுதி
  • இடி மின்னல் இந்திரா!
  • இது காதல் காலம்
  • இது சதிவேளை
  • இது பொதுவழியல்ல
  • இந்த ஆகாயம் புதிது
  • இந்திய நாடு என் வீடு
  • இந்தியன் என்று சொல்லடா
  • இந்து இனி… இல்லை!
  • இப்படிக்கு இறந்துபோன ரமா!
  • இரவுத் தாமரை
  • இரவே இரவே விடியாதே!
  • இருட்டுக்கு இரண்டு நிறம்
  • இருட்டைத் தேடி
  • இரும்பு கனவுகள்
  • இலவசம் ஒரு வானவில்
  • இறப்பதற்கு நேரமில்லை
  • இனி நீ இறக்கலாம்
  • இனி பொறுப்பதில்லை
  • இனி… ராகினி…!
  • இன்பாவின் இரண்டாவது நிழல்
  • இன்றே காதலி!
  • இன்னொரு அத்தியாயம்
  • இடது புறமே கொல்க
  • இலவசம் ஒரு வானவில்
  • இன்பாவின் இரண்டாவது நிழல்
  • இன்பபுரி இருபது கிலோமீட்டர்
  • இந்து சிரிக்கிறாள்
  • இந்துஜா 2000
  • இந்து இனி இல்லை
  • இந்துவின் இன்னொரு பக்கம்
  • இந்துவின் இரண்டாவது இதயம்
  • இங்கே கொலைகள் இனிமையாக செய்யப்படும்
  • இங்கே விவேக் ராஜ்யம்
  • இனி இல்லை இந்து
  • இனி வரும் நிமிஷங்கள்
  • இனிக்கும் இளமை இருபது
  • இனிமைக்கு இன்னொரு பெயர் அனிதா
  • இன்னொரு அத்தியாயம்
  • இன்றே கடைசி
  • இன்றே காதலி
  • இன்றுமுதல்
  • இந்திய நாடு என் வீடு I
  • இந்திய நாடு என் வீடு II
  • இப்படிக்கு இறந்தவர்
  • இப்படிக்கு ஓர் இந்தியன்
  • இரண்டாம் நிழல்
  • இரண்டாவது முகம்
  • இரண்டாவது சீதை
  • இரண்டில் ஒன்று பார்த்துவிடு
  • இறந்து கிடந்த தென்றல்
  • இறப்பதற்கு நேரமில்லை
  • இறப்பது நீ இருப்பது நான்
  • இரவுக்கு ஆயிரம் 'GUN'கள்
  • இருள் பிரியும் நேரம்
  • இருட்டில் ஒரு சொர்க்கம்
  • இருட்டில் பறக்கும் பறவைகள்
  • இசைக் கொலை
  • இதயத்தை துளைத்தவன்
  • இதழே இதழே உயிர் வேண்டும்
  • இது பொது வழியல்ல
  • இது தப்பிக்கும் வேளை
  • இது தான் இந்தியா
  • இந்த ரோஜாவுக்கு நிறமில்லை
  • இந்தியன் என்பது என் பேறு
  • இந்தியனாய் இரு
  • இரண்டாவது உயிர்
  • இரவு நேர வானவில்
  • இருட்டில் ஒரு வானம்பாடி
  • இருள் பொருள் இன்பம்
  • இனி மின்மினி
  • இனிமேல் சாருமதி
  • இன்று இறப்பு விழா
  • ஈரம் தேடும் வேர்கள்
  • உச்சி நிலா
  • உடைந்த இரவு
  1. உடையாத வெண்ணிலா
  2. உலகை விலை கேள்
  3. உள்ளத்தில் நல்ல உள்ளம்
  4. உன் நிழலும் நான்தானே
  5. உன் வானம் என் அருகில்
  6. உறைந்து போன உண்மை
  7. உறவுகள் பிரிவதில்லை
  8. உயிர் மீது தாகம்
  9. உயிர் உருகும் சத்தம்
  10. உயிரின் ஒலி
  11. உயிரோடுதான் விளையாடுவேன்
  12. உள்ளத்தை கிள்ளாதே
  13. உள்ளூர் சதிகள் தனி
  14. உன் கண்ணில் நூறு நிலா
  15. உன் பார்வை நான் அறிவேன்
  16. உன்னால் முடியும் விவேக்
  17. உன்னை விட்டால் யாரும் இல்லை
  18. உடைந்த நிலா
  19. உன்னுடைய GUNகளுக்கு மட்டும்
  20. உதடுகள் சுடும்!
  21. உயிரடங்கு உத்தரவு
  22. உயிரின் நிறம் ஊதா
  23. உயிர்த் திருடர்கள்
  24. உலராத ரத்தம்
  25. உன் முடிவு என் கையில்
  26. உன் நீயும் என் நானும்
  27. உனக்கே உயிரானேன்
  28. உன்னால் முடியும்
  29. உன்னைக் கொன்ற நாள் முதலாய்
  30. உன்னைத் தா உன் உயிரைத் தா
  31. உன்னைத்தான்
  32. உன்னில் என்னை கண்டுபிடி
  33. உன்னோடு ஓர் நாள்
  34. உத்ரா உயிர் தா
  35. உயிர் எடுப்பான் தோழன்
  36. உயிர் பிரியும் நேரம்
  37. உயிர் உதிர் காலம்
  38. உயிர் வீழ்ச்சி
  39. உயிரெடுக்கும் உதடுகள்
  40. உயிரின் உயிரே
  41. உயிரோடு ஒரு நாள்
  42. ஊசி முனையில் உஷா
  43. ஊதா நிலா
  44. ஊதா நிற தேவதை
  45. ஊதா நிழல்
  46. ஊமை புல்லாங் குழல்கள்
  47. ஊசி முனையில் ஓர் உயிர்
  48. ஊதா நிறத் தீவு
  49. ஊமத்தம் பூக்கள்
  50. எந்த நேரத்திலும்
  51. எ டிவின் ரிவென்ஜ்
  52. எல் போர்டு மர்டர்
  53. எல்லாம் பொய்
  54. எல்லாம் நன்மைக்கே
  55. என் இனிய இன்னலே
  56. எனக்கு மட்டுமே தெரிந்த ஹேமா
  57. எனக்கு நானே பகையானேன்
  58. எங்கேயும் எப்போதும்
  59. என்ன சத்தம் இந்த நேரம்?
  60. எதையும் ஒரு தடவை
  61. எதுவும் ஒரு எல்லை வரை
  62. எட்டாவது எச்சரிக்கை
  63. எலெக்ட்ரிக் ரோஜாக்கள்
  64. எளிது எளிது கொல்வது எளிது
  65. என் நிழலுக்கும் உறக்கமில்லை
  66. என் பிரியமான விரோதிகளே!
  67. எங்கிருந்தோ ஆசைகள்
  68. எங்கும் விவேக் எதிலும் விவேக்
  69. என்னைக் கொலையாவது செய் கண்ணே!
  70. என்னை யாரும் தொட்டதில்லை
  71. என்னுடைய ஆகாயம்
  72. என்றாவது ஒரு நாள்
  73. எதிரிகள் தேவை
  74. எவன் அவன்?
  75. எனிடைம் மினி மர்டர்
  76. எண்ணி எட்டாவது நாள் !
  77. என் கையாலே கொன்றாலே போதும்
  78. என் மனைவியின் கணவன்
  79. என் தேசிய கீதம்
  80. எங்கெங்கு தொட்டாலும் இனிமை
  81. எங்கும் ஹேமா எதிலும் ஹேமா
  82. எண்ணி எட்டாவது நாள்
  83. என்றென்றும் உன் எதிரி
  84. என்னுடைய ஆகாயம்
  85. எதற்கும் ஒரு விலை உண்டு
  86. எதிரிகள் தேவை
  87. எதிரிகள் வாழ்க
  88. எதிரில் எதிரி
  89. எட்டு வண்ண வானவில்
  90. எவன் அவன்
  91. எக்ஸ்க்யூஸ் மீ உங்களை கொல்லப் போகிறேன்
  92. என் இனிய விரோதியே
  93. என் வானம் மிக அருகில்
  94. ஏதோ நடக்கிறது!
  95. ஏழாவது அறிவு
  96. ஏழாவது டெஸ்ட் டியூப்
  97. ஐந்து கிராம் ஆபத்து
  98. ஐந்து கிராம் நிலவு
  99. ஒளிவில்லை மறைவில்லை
  100. ஒன்பதாவது திசை
  101. ஒன் மேன் ஆர்மி
  102. ஒன்லி விவேக்
  103. ஒன்றும் ஒன்றும் மூன்று
  104. ஒரு தப்பு தாளம் ஒரு சரியான ராகம்
  105. ஒரு தீப்பந்தம் தீபமாகிறது
  106. ஒரு துளி கடல்
  107. ஒன் + ஒன் = ஜீரோ
  108. ஒரு கிராம் துரோகம்
  109. ஒப்பனைப்பூக்கள்
  110. ஒரே ஒரு நாள்
  111. ஒரு ஆபத்து கண்சிமிட்டுகிறது
  112. ஒரு அதிகாலை கொலை
  113. ஒரு எவரெஸ்ட் தவறு
  114. ஒரு கிராம் துரோகம்
  115. ஒரு குளிர் கால குற்றம்
  116. ஒரு மாலை நேர மரணம்
  117. ஒரு மரணத்தின் மரணம்
  118. ஒரு பொன்மானைத் தேடி
  119. ஒரு சனிக்கிழமை இரவு
  120. ஒரு தூய்மையான குற்றம்
  121. ஒரு வியாழக்கிழமை விடிந்தபோது
  122. ஒரு ஆகஸ்ட் மாத ஆகாயம்
  123. ஒரு கப் ரத்தம்
  124. ஒரு ஃபைவ் ஸ்டார் துரோகம்
  125. ஒரு ஜனவரியின் ஞாயிற்றுக்கிழமை
  126. ஒரு கதவு தட்டப்படுகிறது
  127. ஒரு கோடி ரூபாய் புன்னகை
  128. ஒரு மதிப்பிற்குரிய குற்றம்
  129. ஒரு முக்கிய அறிவிப்பு
  130. ஒரு நாள் ராஜாக்கள்
  131. ஒரு நிமிஷ நிசப்தம்
  132. ஒரு நதி, ஒரு பௌர்ணமி, ஒரு பெண்
  133. ஒரு நாள் ஒரு கனவு
  134. ஒரு ரோஜா இதழ் எரிகிறது
  135. ஒரு ரோஜா இதழும் சில ரத்தத் துளிகளும்
  136. ஒரு ரோஜாவும் சில தோட்டாக்களும்
  137. ஒரு தேன் கூடும் சில கற்களும்
  138. ஒற்றை மேகம்
  139. ஒளிந்தாலும் விடமாட்டேன்
  140. ஒன்று இரண்டு இறந்துவிடு
  141. ஒற்றை மேகம்
  142. ஒரு அதிகாலை பிழை
  143. ஒரு அழகான ஆபத்து
  144. ஒரு சின்ன மிஸ் டெத்
  145. ஒரு ஈஸ்ட்மெண்ட் நிற கொலை
  146. ஒரு இந்திய குடிமகன்
  147. ஒரு கால் சுவடு தொடர்கிறது
  148. ஒரு காகிதப் பூவும் சில பட்டாம் பூச்சிகளும்
  149. ஒரு கண்ணாடி வீடும் சில கற்களும்
  150. ஒரு கோடி ராத்திரிகள்
  151. ஒரு மழை நாளில்
  152. ஒரு மேகத்தின் தாகம்
  153. ஒரு மெல்லிய சிகப்பு கொடு
  154. ஒரு முல்லை பூவின் முடிவு
  155. ஒரு முற்பகல் மரணம்
  156. ஒரு நிமிஷ நிசப்தம்
  157. ஒரு பெளர்ணமி மரணம்
  158. ஒரு சிவப்பு ரோஜாவின் சில இதழ்கள்
  159. ஒரு தீக்குச்சியின் வெளிச்சத்தில்
  160. ஒரு தேவதையைத் தேடி
  161. ஒரு வானம் சில பறவைகள்
  162. ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது
  163. ஒரு விடியற்காலை
  164. ஒரு விடியற்காலை விபரீதம்
  165. ஒன்பதாவது திசை பத்தாவது கிரகம்
  166. ஓடாதே! ஒளியாதே!
  167. ஓடும் வரை ஓடு
  168. கலிஃபோர்னியா காதலி
  169. கிரிமினல் யூனிவர்சிட்டி
  170. கங்கை இங்கே திரும்புகிறது
  171. குட்மார்னிங் அமெரிக்கா
  172. குட்நைட் குரோதம்
  173. காந்தி தேசம்
  174. கங்கை ஆறும் பாதை மாறும்
  175. காகித ரோஜாக்கள்
  176. காகிதப் பூ தேன்
  177. காணாமல் போன நிலா
  178. கானல் நீரில் நீந்தும் மீன்கள்
  179. காணாமல் போன ஆகாயம்
  180. கடைசி எதிரி பாகம் l
  181. கடைசி எதிரி பாகம் 2
  182. கடைசி கட்டளை
  183. கடைசி சொட்டு ரத்தம் - 1
  184. கடைசி சொட்டு ரத்தம் -2
  185. கையில் ஒரு மின்னல்
  186. கைகுட்டைக்குள் வானம்
  187. கனவுகள் இங்கே விற்கப்படும்
  188. கண்ணெல்லாம் உன்னோடுதான்
  189. கண்மணி நில்லு காரணம் சொல்லு
  190. கண்ணாலே கொல்லாதே!
  191. கண்ணிலே நீர் எதற்கு
  192. கற்கண்டு ஆயுதம்
  193. கற்பூர பொம்மைகள்
  194. கருப்பு உடை தேவதை !
  195. கற்றது டைமண்ட் களவு
  196. காற்றின் நிறம் கறுப்பு
  197. காற்றை கைது செய்
  198. கறுப்பு நெருப்பு
  199. கறுப்பு பெளர்ணமிகள்
  200. கறுப்பு தாமரை
  201. கறுப்பு வானவில்
  202. கறுப்பு வணக்கம்
  203. கீழே விழாத நிழல்
  204. கிலியுகம்
  205. கோடி கோடி மின்னல்கள்
  206. கொஞ்சம் மேகம் கொஞ்சம் நிலவு
  207. கொஞ்சும் கிளி
  208. கொன்றால் பாவமில்லை
  209. கொன்றாலும் குற்றமில்லை
  210. கூடவே ஒரு நிழல்
  211. குறி
  212. குறி வச்சாச்சு
  213. குறிஞ்சிப் பூக்கள் எங்கும் பூக்கும்
  214. குற்றம் குற்றமே
  215. குற்றங்கள் குறைவதில்லை
  216. காகித இருதயங்கள்
  217. காணாமல் போன முகம்
  218. காதல் தொழிற்சாலை
  219. காற்று உறங்கும் நேரம்
  220. காவ்யாவின் கறுப்பு தினங்கள்
  221. காகித புலிகள்!
  222. கண்களில் எத்தனை கள்ளமடி
  223. கண்ணாமூச்சி
  224. கண்ணீர் மிச்சமில்லை
  225. கண்ணில் தெரியாத வானம்
  226. கண்ணிமைக்க நேரமில்லை
  227. கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்
  228. கரைக்கு வராத அலைகள்
  229. காஷ்மீரில் ஒரு கறுப்பு நாள்
  230. காதல் தேசத்துக்கு ஒரு விசா
  231. காதலுக்கு கண் இருக்கு
  232. கவிதா நகர் கடைசி தெரு
  233. கிழக்கு சிவக்கையிலே
  234. கிலி காலம்
  235. கொலை வள்ளல்
  236. கொலைவிழும் மலர்வனம்
  237. கோடு ! தாண்டாதே !
  238. கோவையில் ஒரு குற்றம்
  239. குற்றமும் கற்று மற
  240. காகித ஆயுதங்கள்
  241. காணாமல் போன முகம்
  242. காதல் தேசத்திற்கு ஒரு விசா
  243. காதலுக்கு கண் இருக்கு
  244. கடைசி தீக்குச்சி
  245. கடலோரக் கொலைகள்
  246. கைவந்த கொலை
  247. கையில் சிக்கிய மின்னல்
  248. கண் எதிரே ஓர் உயிர்
  249. கண் இமைக்க நேரமில்லை
  250. கனவின் விலை பத்து லட்சம்
  251. கண்டு கொன்று வருக
  252. கண்ணில் அடிக்குது மின்னல்
  253. கண்ணில்லாத பொம்மை
  254. கண்ணோடு கலந்து விடு
  255. கண்ணுக்கு தெரியாத ஒரு வலை
  256. கண்ணுக்குள் நீதான்
  257. கண்ணுக்குள் ஒரு முள்
  258. கரணம் தப்பினால் மரணம்
  259. கற்பிழந்த கார்பன் காப்பிகள்
  260. கறுப்பு ஞாயிறு சிவப்பு திங்கள்
  261. கறுப்பு மல்லிகை
  262. கவிதை அல்ல கதை சொல்லும் கம்ப்யூட்டர் மனிதன்
  263. கிளி கிலி கிழி
  264. கோகிலாவும் ஒரு கோடைக்காலமும்
  265. கொலைகார கம்ப்யூட்டர்
  266. கொலைகள் ஓய்வதில்லை
  267. கொலை செய்ய விரும்பு
  268. கொலை தொடர்புக்கு அப்பால்
  269. கொலை தூர பயணம்
  270. கொலையும் செய்வாள் பத்மினி
  271. கொல்ல கொல்ல இனிக்குதடா
  272. கொல்லாமல் வராதே
  273. கொல்லாதே ப்ளீஸ்
  274. கொஞ்சும் வஞ்சனை
  275. கொன்றாள் கொன்றான் கொன்றேன்
  276. குறிவைத்துக் கொல்
  277. குற்றாலத்தில் ஒரு குற்றம்
  278. காந்தி தேசம்
  279. கவனம் விவேக்
  280. கோபுரம் மார்க் கொலைகள்
  281. கால் ஃப்ரம் டோக்கியோ
  282. கிரைம் டாட் காம்
  283. கண்ணுக்குள் எத்தனை கள்ளமடி
  284. குறிஞ்சிப் பூக்கள்
  285. சாதல் சாம்ராஜ்யம்
  286. சங்கமித்திரை
  287. சர்ப்ப வியூகம்
  288. சத்தமில்லாமல் ரத்தமில்லாமல்
  289. செய்! செய்யாதே!
  290. சில வெள்ளை இரவுகளும் கருப்பு பகலும்
  291. சில தவறுகள்
  292. சைலண்ட் கில்லர்ஸ்
  293. சிம்லா ரம்யா
  294. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொல்
  295. சாம்ராஜ்ஜியம்
  296. சயனைட் புன்னகை
  297. சின்னத் தப்பு பெரிய தப்பு
  298. சயனைட் சாம்ராஜ்யம்
  299. சிறையில் ஒரு பறவை
  300. சிவப்பு உடை தேவதை
  301. சிவப்பு கவிதை
  302. சிவப்பாய் ஒரு பௌர்ணமி
  303. சிவப்பாய் சில கனவுகள்
  304. சொர்க்கம்
  305. சொர்க்கத்தின் சாவி
  306. சுடும் நிலவு சுடாத சூரியன்
  307. சுமதி என்கிற சுமை
  308. சக்கர பூக்கள்
  309. சத்தமில்லாத நயாகரா
  310. சதுரங்க குதிரைகள்
  311. சதுரங்க ராஜா
  312. சத்தமில்லாத சமுத்திரம்
  313. சிகப்பு ரோஜக்கள்
  314. சூரிய தாகம்
  315. சிகப்பு தாஜ்மஹால்
  316. சிங்கப்பூர் விநாடிகள்
  317. சின்னஞ் சிறு கிளியே
  318. சிந்திய ரத்தம் இந்திய ரத்தம்
  319. சிறகடிக்க ஆசை!
  320. சிவப்பு நிமிஷங்கள்
  321. சிவப்பு நவம்பர்
  322. சிவப்பு பனித்துளி
  323. சிவப்பு தென்றல்
  324. சிவப்பு வானவில்
  325. சினேகாவின் சிவப்பு டைரி
  326. சொர்க்கம் என் பக்கம்
  327. சஸ்பென்ஸ்
  328. சாரி ராங் நம்பர்
  329. சாகா வரம்
  330. சாதல் ஓய்வதில்லை
  331. சயனைட் சாம்ராஜ்யம்
  332. சைவக் கொக்குகள்
  333. சமாதி ஆக சம்மதி
  334. சனிக்கிழமை இரவு 5
  335. சத்தமில்லாமல் ஒரு சத்தம்
  336. சத்தமில்லாத யுத்தம்
  337. சதுரங்க ராணி
  338. செய்திகள் வாசிப்பது சிந்துஜா
  339. சென்ற இடமெல்லாம் இறப்பு
  340. சிகப்பு புறாக்கள்
  341. சிகப்பு வானவில்
  342. சிம்லா ரம்யா செவர்லெட்
  343. சிந்து, ரத்தம் சிந்து
  344. சிப்பிக்குள் நல்ல முத்துக்கள்
  345. சிதறிய பூக்கள்
  346. சிவப்பு இரவு
  347. சிவப்பு ரோஜாவின் சில இதழ்கள்
  348. சிவப்பு வானம்
  349. சிவப்பு வட்டத்துக்குள் சிந்துஜா
  350. சூரியனைத் திருடு
  351. சூரியதாகம்
  352. சொர்க்கம் என் கையில்
  353. சொர்க்கம் என் பக்கம்
  354. சொர்க்கம் ஹவுஸ்ஃபுல்
  355. சொர்க்கத்தின் புதிய முகவரி
  356. சுட்டுவிட சுட்டுவிட தொடரும்
  357. சின்னஞ்சிறு கிலியே
  358. சிவப்பாய் ஒரு பௌர்னமி
  359. சின்னதப்பு பெரியதப்பு
  360. சிக்காகோ சீக்ரெட்
  361. ஞாயிறு சுடுமுறை நாள்
  362. டிசம்பர் இரவுகள்
  363. டிசம்பர் 31 1999
  364. டிசம்பர் நிலா
  365. டோக்கியோவில் விவேக்
  366. டெட்லைன் I
  367. டெட்லைன் II
  368. டிசம்பர் நிலாவே
  369. டிசம்பர் பௌர்ணமி
  370. டயல் ஃபார் கில்
  371. டாலர் மழை
  372. டைனமைட் 98
  373. தலை நகரம்
  374. தினசரி மூன்று கொலைகள்
  375. தாஜ்மஹால் நிழல்
  376. தடையை உடை
  377. தலையுதிர் பருவம்
  378. தண்டனை தப்பாது!
  379. தப்பு செய் தப்பிச் செல்
  380. தப்பு தப்பாய் ஒரு கொலை
  381. தப்பு தப்பாய் ஒரு தப்பு
  382. தட்டுங்கள் திறக்காது
  383. தவறுக்கு தவறான தவறு
  384. தி மூன்ஸ்டோன் பாட்டில்
  385. தீ தீபா தீபாவளி
  386. தேடு கிடைக்காது
  387. தீப்பிடித்த தென்றல்
  388. தேவை ஒரு தேவதை
  389. தென்றல் வரும் ஜன்னல்
  390. திக் திக் திலகா
  391. திறக்காத ஜன்னல்கள்
  392. தூங்காத Gun ஒன்று
  393. தொட்டவனை விட்டதில்லை
  394. தடங்கலுக்கு வருந்துகிறோம்
  395. தலைப்புச் செய்தி
  396. தங்க மச்சம்!
  397. தங்க சொர்க்கம்
  398. தப்பாட்டம்
  399. தப்பித்தே ஆக வேண்டும்
  400. தப்பு தாரணி தப்பு
  401. தீர விசாரிப்பதே பொய்
  402. திக் திக் டிசம்பர்
  403. திக் திக் திவ்யா
  404. திகில் திருவிழா!
  405. திறக்காத கதவுகள்!
  406. திருமரண அழைப்பிதழ்
  407. திரும்பிப் பார்த்த ஓவியம்
  408. திசை தேடும் பறவை!
  409. தொடுவானம்
  410. தூக்குமரப் பூக்கள்
  411. தூங்காத தோட்டாக்கள்
  412. தூரத்தில் ஒரு சிகப்புக்கொடி
  413. தூரத்து துரோகம்
  414. தூரத்துப் பொன்மான்
  415. தோட்டா ஃப்ரம் தொட்டபெட்டா
  416. துரத்தும் துரோகங்கள்
  417. தீர்ப்பு
  418. தடுத்தால் கூட தருவேன்
  419. தாழம்பூ நாகங்கள்
  420. தடங்கலுக்கு வருந்த வேண்டாம்
  421. தனித்திரு விழித்திரு
  422. தனியாக ஒரு தவறு
  423. தப்பு + தப்பு = சரி
  424. தப்பு தப்புதான்
  425. தர்மம் தலை கேட்கும்
  426. தவணை முறையில் மரணம்
  427. தீ நிலா
  428. தேடினாலும் கிடைக்காது
  429. தேடும் உயில் உயிர்
  430. தேடுங்கள் கிடைக்காது
  431. தீமைக்குத் தீயிடு
  432. தீப்பந்தம் எடு தீமையைச் சுடு
  433. தீப்பிடித்த நந்தவனம்
  434. தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
  435. திகில் காலம்
  436. திசைமாறும் அலைகள்
  437. தித்திக்கும் தீ
  438. தொடர்ந்து வா தொட்டுவிடாதே
  439. தொலைபேசி எண் 000000
  440. தூக்குக் கயிறு
  441. தூங்காத தோட்டாக்கள்
  442. தூரத்து மின்னல்கள்
  443. தூரத்து பொன் மான்
  444. தூரத்து சொர்க்கம்
  445. திகில் ரோஜா
  446. திக் திக் டிசம்பர்
  447. திக் திக் திவ்யா
  448. தினம் தினம் திகில் திகில்
  449. திசைமாறும் அலைகள்
  450. தூரத்தில் ஒரு சிகப்புக்கொடி
  451. தூரத்தில் தெரியும் சொர்க்கம்
  452. திலகா
  453. நாளை யாரோ
  454. நான் நானல்ல
  455. நான் நானேதான்
  456. நகராத நிழல் ஒன்று
  457. நைலான் கனவுகள்
  458. நள்ளிரவு செய்தி
  459. நள்ளிரவுச் செய்திகள் வாசிப்பது துர்கா
  460. நம்ருதாவின் 41வது நாள்
  461. நீ எங்கே என் அன்பே
  462. நீல நிலா
  463. நீலநிற நிழல்கள்
  464. நீதானா நிஜம்தானா
  465. நீயா? நானா?
  466. நீயே… நீயே… நானே நீயே…!
  467. நீயும் பொம்மை நானும் பொம்மை
  468. நேற்று போல் இன்றும் இல்லை…
  469. நெஞ்சுக்குள் நீ
  470. நெருப்பு நிமிஷங்கள்
  471. நியூஜெர்சி தேவதை
  472. நில் கவனி காதலி
  473. நிலவைக் களவு செய்
  474. நினைத்தேன் கொன்றேன்
  475. நிழலின் குரல்
  476. நிழலின் நிறம் சிவப்பு
  477. நூறு டிகிரி தென்றல்
  478. நவம்பர் ராத்திரிகள்
  479. நாட் அகைன்
  480. நுனிப்புல்
  481. நான் நளினா நள்ளிரவு
  482. நான் உன்னோடு நீ யாரோடு
  483. நெஞ்சமெல்லாம் நெருஞ்சி முள்
  484. நானாக நானில்லை
  485. நான்காவது குரங்கு
  486. நாளைய தேசம்
  487. நான் நிழல் இல்லாதவன்
  488. நந்தினி நாளை இறக்கிறாள்!
  489. நட்சத்திரம் இல்லாத இரவு
  490. நீ மட்டுமே வேண்டும்!
  491. நீயா? நானா?
  492. நீங்காத நிழல் ஒன்று
  493. நேற்று நரகம் இன்று சொர்க்கம்
  494. நியூ டெல்லி 2001
  495. நியூயார்க் நிலா
  496. நிலா வெளிச்ச சதி
  497. நிலவைத் தேடும் சூரியகாந்திகள்
  498. நிலவுக்குள் இருட்டு!
  499. நிமிஷத்துக்கு நிமிஷம்
  500. நிறம் மாறும் நிலாக்கள்
  501. நிறம் மாறும் நிஜங்கள்
  502. நிறங்கள்
  503. நித்யாவின் நிமிஷங்கள்
  504. நிழல்கள்
  505. நிழலின் நிறம் சிவப்பு!
  506. நவம்பர், நள்ளிரவு… நர்மதா!
  507. நவம்பர் நிலா
  508. நாளை நீ இல்லை
  509. நாளைக்கு சாகலாம்
  510. நாளைய வானம்
  511. நாலும் தெரிந்து கொல்
  512. நான் ஏன் இறந்தேன்
  513. நான் இனி நீ, நீ இனி நான்
  514. நான் கொல்லுவதெல்லாம் உண்மை
  515. நான் முகம் பார்த்த கண்ணாடிகள்
  516. நான் நிழல் இல்லாதவன்
  517. நான் தேடும் ரோஜாப்பூ
  518. நடு நிசித் தென்றல்
  519. நள்ளிரவு வானவில்
  520. நந்தினி 440 வோல்ட்ஸ்
  521. நதிக்கரை ஞாபகம்
  522. நயாகரா புயல்
  523. நீவேறு அல்ல நான்வேறு அல்ல
  524. நீ வேறு நான் வேறு என்று யார் சொன்னது
  525. நீல நிற மல்லிகை
  526. நீலம் என்பது நிறமல்ல
  527. நீலநிற நிமிஷங்கள்
  528. நீலத்தாமரை
  529. நேற்று நிர்மலா இன்று பரிமளா
  530. நியூடெல்லி எரிகிறது
  531. நைட் பிளைட் டூ நியூயார்க்
  532. நில் கவனி காத்திரு
  533. நில் கவனி கொல்
  534. நிலத்தில் நீந்தும் மீன்
  535. நிலவு தூர உறவுகள்
  536. நிலவுக்குள் இருட்டு
  537. நில்லாமல் ஓடி வா
  538. நின்று போன நிமிசங்கள்
  539. நிறம் மாறும் இரவுகள்
  540. நிறம் மாறும் நிஜங்கள்
  541. நிறம் மாறும் வானவில்கள்
  542. நிறங்கள் இறந்தன
  543. நிற்காத நிமிடங்கள்
  544. நிஷா நிஷா ஓடி வா
  545. நிழல் போர்
  546. நிழலின் நிழல்
  547. நிழலும் சுடும்
  548. நீ இன்றி நான் ஏது?
  549. நீல நிற நிழல்
  550. புத்தம் புது பூமி வேண்டும்
  551. போக போகத் தெரியும்
  552. பிருந்தா அன்பிருந்தா
  553. புல்லட் சேம்பர்
  554. புல்லட் புன்னகை
  555. பிருந்தா பிரைவேட் லிமிடெட்
  556. பாய்ந்து வா விவேக்
  557. பால் நிலா ராத்திரி
  558. பச்சைப் பொய்யும் சிவப்பு உண்மையும்
  559. பகல் நேர அல்லிகள்
  560. பனி நிலவு
  561. பாரீஸ் பயங்கரம்
  562. பதினோராவது அவதாரம்
  563. பவளப் பள்ளத்தாக்கு
  564. பேசும் ரோஜாக்கள்
  565. பெண் பார்க்க போறேன்..!
  566. பெண்ணால் முடியும்
  567. பிறகு நான் கொன்றேன்
  568. பொய்யை தவிர வேறொன்றுமில்லை
  569. பூ மலரும் சத்தம்
  570. பூஜா புதுடெல்லி பூகம்பம்
  571. பூவே… பூவே!
  572. பூவில் செய்த ஆயுதம்
  573. பொறுத்தது போதும் விவேக்
  574. புதைத்து வைத்த நிலா
  575. புதிதாய் ஒரு பூகம்பம்
  576. புதிய அபாயம்
  577. புதிய கடவுள்
  578. புதிய திசைகள்
  579. புது எதிரி
  580. புதுமை உலகம்
  581. பாலைவனப் பௌர்ணமி
  582. பாராசூட் பாவங்கள்
  583. பாதரசப் பறவைகள்
  584. பச்சைக்கண் தேவதை
  585. பகை, எனக்கு பகை!
  586. பகல் நேர மின்னல்
  587. பகல் நேர பாரிஜாதங்கள்
  588. பகல் நேரத்துக் கண்ணகிகள்
  589. பணம், பதவி, பலி
  590. பஞ்சவர்ணக் கி(ளி)லி
  591. பஞ்ச வர்ணக் கொலைகள்
  592. பன்னீர் பூ பந்தல்
  593. பிஸ்டல் முத்தம்
  594. பிஸ்டல் வாழ்த்து
  595. போகப் போகத் தெரியும்
  596. போகும் இடம் வெகுதூரமில்லை
  597. பூக்கள் உன் வாசமடி
  598. பூக்கள் இல்லாத நந்தவனம்
  599. பூவில் ஒரு சூறாவளி
  600. பூவும் புயலும்
  601. பிரியாதே பிரியா!
  602. புதிது, புதிது, குற்றம் புதிது!
  603. புலிப்பொறி
  604. புதைத்து வைத்த நிலா
  605. புதிய பூ பூத்தது
  606. புதியதாய் ஒரு புதிர்
  607. புது டெல்லி 5.45.ஏ.எம்
  608. பறப்பதற்கு ஒரு வானம் வேண்டும்
  609. பெண்ணே அனிதா
  610. பாதி ராஜ்ஜியம்
  611. பச்சை கண் தேவதை
  612. பகல் நேர மின்னல்
  613. பகல் நேர பாரிஜாதங்கள்
  614. பகல் நேர பாதகங்கள்
  615. பணம் பதவி பலி
  616. பஞ்சவர்ண கொலைகள்
  617. பணிவோடு கேட்டுக் கொல்கிறேன்
  618. பாராசூட் பாவங்கள்
  619. பத்து வினாடி ஆபத்து
  620. பாஸ்பரஸ் பூக்கள்
  621. பிரியாதே பிரியா
  622. பிஸ்டல் வாழ்த்து
  623. பிரியமான கொலைகாரன்
  624. போகப் போகத் தெரியும்
  625. பொய் சாட்சி
  626. பூ புயல்
  627. பூக்கள் பறிப்பதற்கே
  628. பௌர்ணமி அலைகள்
  629. பிரேம் குமாரின் போஸ்ட் மார்ட்டம்
  630. புனிதா ஒரு புதிர்
  631. புதிதாய் ஒரு சதி செய்வோம்
  632. புதிது புதிது குற்றம் புதிது
  633. புதிய பாடல் பாடு
  634. புதிய பூவிது பூத்தது
  635. புது பிரம்மா
  636. புயல் விநாடிகள்
  637. பம்பாய்க்கு பத்தாவது மைலில்
  638. மகா சதி
  639. மனம் இறந்து பேசுகிறேன்
  640. மனசெல்லாம் மாயா
  641. மனசெல்லாம் பந்தலிட்டு…
  642. மனிதன்
  643. மரணம் உன்னை மன்னிக்கட்டும்
  644. மற்றவை நள்ளிரவு 1.05க்கு
  645. மீண்டும் மீண்டும்
  646. மாண்டவன் கட்டளை
  647. மாதங்களில் அவள் மார்கழி
  648. மீண்டும் விவேக்கின் விஸ்வரூபம்
  649. மெல்ல மெல்ல ஒரு திகில்
  650. மிஸ்ட்டி மூன்
  651. மோகனா 30 நாள்
  652. மூச்சில் வாழும் புல்லாங்குழல்
  653. மூடுபனி நிலவு
  654. முதல் நிமிஷம்
  655. முகமற்ற நிழல்கள்
  656. முள் நிலவு
  657. முயன்றால் மடிவாய்
  658. மாண்புமிகு இந்தியன்
  659. மலிவு விலையில் ஒரு மரணம்
  660. மல்லிகை மனசு
  661. மன்னிக்காதே, மறக்காதே…
  662. மன்னிக்கப்பட்ட மரணம்
  663. மரணயோகம்
  664. மரணத்தை வரைந்தவன்
  665. மரணத்திற்கு ஒரு மனு
  666. மார்ச் 6 இரத்த ஆறு
  667. மதுமிதாவின் மஞ்சள் பக்கங்கள்
  668. மற்றொரு மஹாபாரதம்
  669. மெழுகுவத்திகள்
  670. மேனகாவின் மே மாதம்
  671. மைக்ரோ விழிகள்
  672. மின்னலாய் வா விவேக்!
  673. மின்சாரப் புன்னகை
  674. மிஸ். பாரதமாதா
  675. மோனாலிசா (புன்னகை) அழுகை
  676. மண்டே மர்டர் டே!
  677. மூன்று வினாடி முகம்
  678. மொட்டுக்கள் பூக்கட்டும்
  679. முதல் தீக்குச்சி
  680. முடிந்தால் உயிரோடு
  681. முள் கிரீடம்!
  682. முள் இல்லாத கடிகாரம்
  683. முள் முனையில் முகிலா
  684. முள் நிலவு
  685. முதல் பகல்
  686. மாதம் ஒரு டைரி
  687. மாய ஹாஸ்பிட்டல்
  688. மல்லிகை பூவாய் மாறிவிட ஆசை
  689. மஞ்சள் டயரி
  690. மன்னிக்கப்பட்ட மரணம்
  691. மரணச்சீட்டு
  692. மரணச்சீட்டை கேட்டு வாங்கவும்
  693. மரணம் சுலபம்
  694. மரணத்தின் தேதி மார்ச் 7
  695. மரணயோகம்
  696. மார்ச்சுவரி ஹவுஸ்புல்
  697. மற்றவை நேரில்
  698. மற்றவை துப்பாக்கியில்
  699. மற்றொரு நாள்
  700. மறுபடியும் இறந்தவன்
  701. மறுபடியும் ஒரு தடவை
  702. மறுபடியும் சந்திப்போம்
  703. மதுபாலாவின் மறு பக்கம்
  704. மழை பெய்த இரவில்
  705. மீண்டும் ஆகஸ்ட் 15
  706. மீண்டும் மீண்டும் வேண்டும் வேண்டும்
  707. மெல்ல மெல்ல என்னை கொல்லாதே
  708. மெல்ல மெல்ல ஒரு பூகம்பம்
  709. மெல்ல சிவந்தது வானம்
  710. மெல்ல வரும் பூகம்பம்
  711. மேனகாவின் மே மாதம்
  712. மென்மையாய் ஒரு வன்முறை
  713. மின்சார நிலா
  714. மிஸ் ப்ரீதி 545 பீச்ரோடு மும்பை
  715. மிஸ் தேவதை 1996
  716. மூடு பனி வீடு
  717. முகம் இல்லாதவன்
  718. முகம் தெரியாதவன்
  719. முள் கிரீடம்
  720. முள் முனையில் முகிலா
  721. முள்ளை முள்ளால்
  722. மர்டர் டெர்மினல்
  723. மர்மங்கள்
  724. முதல் தீக்குச்சி
  725. முத்திரை சதி
  726. முத்தம் தேடும் முகம்
  727. யாரோ பார்க்கிறார்கள்
  728. யமுனாவின் 48 மணி நேரம்
  729. யாரோ பாடிய பாடல்
  730. யுத்த சத்தம்
  731. யுத்த பூமி
  732. யாரோ எழுதிய பாடல்
  733. யாரும் இங்கே ராமன் இல்லே
  734. யாரும் பார்க்காத வானம்
  735. யுவர்ஸ் மர்டர்லி
  736. ராணிக்கு செக்
  737. ராஜாளி
  738. ரஜினி ராஜ்யம்
  739. ரெட்ரோஸ் கெஸ்ட் ஹவுஸ்
  740. ரத்தம் இல்லா யுத்தம்
  741. ரத்தமின்றி ஒரு யுத்தம்
  742. ராவண ராஜ்ஜியம்
  743. ரத்தம் தா ரத்னா
  744. ரத்த ஞாயிறு
  745. ரத்தக் கறைத் தோட்டாக்கள்
  746. ரத்தம் பல நிறம்
  747. ரத்தமில்லாத மனிதன்
  748. ரத்தத்தில் ஒரு கேள்விக்குறி
  749. ரெடிமேட் சொர்க்கம்
  750. ரெட் அலர்ட்
  751. ரெண்டும் மூணும் ஏழு
  752. ரோஜா முள் கிரீடம்
  753. ரோஜா முள் துரோகம்!
  754. ரோசாப் பூவு, லேசாய் சாவு
  755. ராணி இரண்டாயிரம்
  756. ராஜ ரகசியம்
  757. ரத்தமில்லாத மனிதன்
  758. ரத்த ராஜ்யம்
  759. ரத்தம் பல நிறம்
  760. ரத்தம் சிந்தும் ரோஜாக்கள்
  761. ரத்தம் தா இந்து
  762. ரத்தம் தா ரத்னா!
  763. ரத்தத்தில் ஒரு கேள்விக்குறி!
  764. ரெட் சலூயுட்
  765. ரோஜாக்களும் தோட்டாக்களும்
  766. லேகா என் லேகா
  767. லேசர் பறவைகள்
  768. லாஸ்ட் புல்லட் l
  769. லாஸ்ட் புல்லட் ll
  770. வசந்த காலம்
  771. வளைவுகள் அபாயம்
  772. வணக்கத்திற்குரிய குற்றம்
  773. வாழ்ந்து காட்ட வேண்டும்
  774. வேர் கூட பூ பூக்கும்
  775. வெள்ளை இருட்டு
  776. வெள்ளை நிறத்தில் ஒரு வானவில்
  777. வெள்ளை ரோஜா கறுப்பு பூனை
  778. வெல்வெட் க்ரைம்ஸ்
  779. வெல்வெட் கில்லர்
  780. வெல்வெட் குற்றங்கள்
  781. வேங்கை வெளியே வருது
  782. வென்று வா விவேக்
  783. விடியாத இரவொன்று வேண்டும்
  784. விடுபட்டவை விரைவில்
  785. விலகும் திரைகள்
  786. வினயா ஒரு விடுகதை
  787. விற்பனைக்கு அல்ல
  788. விதி விதிக்கிறேன்
  789. விவேக் இன் டோக்கியோ
  790. விவேக் இனி ஆட்டம் உன் கையில்
  791. விவேக் விஷ்ணு ஒரு விடுகதை
  792. விவேக் தோற்றதில்லை
  793. விவேக், விஷ்ணு , ஒரு விடுகதை
  794. விவேக்கும் 41 நிமிஷங்களும்
  795. வயலட் கனவுகள்
  796. வா அருகில் வா
  797. வாய்மையே கொல்லும்
  798. வானவில் குற்றம்
  799. வர்ணாவின் மரணம்
  800. வர்ணம் இழந்த வானவில்
  801. வெள்ளை நிழல்
  802. வெள்ளிக்கிழமை விடியும் வேளை
  803. வெல்வெட் குற்றம்
  804. வெண்ணிலாவே விடை சொல்லு
  805. வெற்றி என்றால் விவேக்!
  806. வேட்டையாடு விவேக்
  807. விட மாட்டான் விவேக்!
  808. விடைசொல் விவேக்
  809. விலகு, விபரீதம்
  810. வினோத் ஒரு வினாக்குறி
  811. விரைந்து வா, விவேக்!
  812. விவேக், அசோக், ராஜேஷ்
  813. விவேக் அது விஷம்!
  814. விவேக் இருக்க பயமேன் – 1
  815. விவேக் இருக்க பயமேன்- 2
  816. விவேக் ஜாக்கிரதை!
  817. விவேக் நெவர் அவுட்
  818. விவேக் விஷ்ணு வெற்றி
  819. விவேக் vs விவேக்
  820. விவேக் வான்ட்டட்!
  821. விவேக்! விடிவதற்குள் வா!
  822. விவேக்கின் 1௦௦௦ நிமிஷங்கள்
  823. வாஷிங்டனில் விவேக்
  824. வெல்கம் டு மார்ச்சுவரி
  825. வா என் முதல் எதிரியே
  826. வாடகைக்கு ஒரு இதயம்
  827. வாடகைக்கு ஒரு சொர்க்கம்
  828. வாடகைக்கு ஒரு உயிர்
  829. வானத்தில் கோலமிட்டு
  830. வான்நிலா
  831. வைரச் சுரங்கம்
  832. வண்ண வண்ண துரோகங்கள்
  833. வரணும் மறுத்தால் மரணம்
  834. வாழ்க்கை வாழத்தானே
  835. வெள்ளி மணி
  836. வெல்வெட் இரவுகள்
  837. வெல்வெட் கனவுகள்
  838. வெல்வெட் யுத்தம்
  839. வெண்ணிலவே விடை சொல்லு
  840. விபரீத வினாடிகள்
  841. விபரீதங்கள் விற்கப்படும்
  842. விபரீதத்திற்கு ஒரு விசா
  843. விடாதே விவேக் விடாதே
  844. விடிந்தால் இரவு
  845. விடியட்டும் விடை கிடைக்கும்
  846. விலைக்கு ஒரு வானவில்
  847. விலையாக ஒரு கொலை
  848. விலகு விபரீதம்
  849. வினோத் ஒரு வினாக்குறி
  850. விரல்கள்
  851. விதி புதிது
  852. வித்யாவோடு ஒரு விளையாட்டு
  853. விவேக் நாட் அவுட்
  854. விவேக் உன் எதிரில் ஒரு எதிரி
  855. விவேக் விடிவதற்குள் வா
  856. விவேக் வியூகம்
  857. விவேக்கின் விஸ்வரூபம்
  858. வெல்டன் விவேக்
  859. வாடகை தேவதை
  860. வானவில்லே வானமல்ல
  861. வானவில்லின் எட்டாவது நிறம்
  862. வைகறை நிலா
  863. விட்டு விடு விவேக்
  864. வைகறை நிழல்கள்
  865. ஜன்னல் நிலா
  866. ஜனவரி இரவுகள்
  867. ஜனவரி நிலவே !
  868. ஜன்னல் சீதைகள்
  869. ஜீவா ஜீவா ஜீவா
  870. ஜெயிப்பது நிஜம்
  871. ஜமுனா ஜாக்கிரதை
  872. ஜன்னல் நிலா
  873. ஜனவரி மரணங்கள்
  874. ஜூலையில் ஒரு கொலை
  875. ஜன்னல்கள் திறக்கின்றன
  876. ஜூன் ஜூலியா!
  877. ஜீரோ டிகிரி டெத்
  878. ஹலோ டெட் மார்னிங்
  879. ஹரிதாவும் 41 கலைகளும்
  880. ஹாங்காங் விழிகள்
  881. ஹைட்ரஜன் பூக்கள்
  882. ஹேப்பி டெத் டே
  883. ஹரிதா ஒரு ஆச்சர்யக்குறி !
  884. ஹாங்காங் அதிர்ச்சி
  885. ஷீலா சிம்லா சிறிது ரத்தம்
  886. ஸாரி ராங் நம்பர்
  887. ஸாரி கொன்னுட்டேன்
  888. 19 வயது சொர்கம்
  889. 50kg தாஜ்மஹால்
  890. 100வது பௌர்ணமி
  891. 11 மணி 59 நிமிடங்கள் 59 வினாடிகள்
  892. 5 AM TO 5 PM
  893. 6ஆம் தேதி 6மணி 6 நிமிடம் 6 வினாடி
  894. XYZ மர்டர்ஸ்
  895. ஹேமா ப்ளீஸ் எனக்காக
  896. ஷர்மிலி
  897. ஃபர்ஸ்ட் ஃபிளைட் டு பாரிஸ்
  898. ஃபிளாட் நம்பர், 144 அதிரா அபார்ட்மென்ட்
  899. ராஜேஷ்குமார் - தேர்ந்தெடுத்த நாவல்கள் - 1
  900. ராஜேஷ்குமார் - தேர்ந்தெடுத்த நாவல்கள் - 2

மற்றும் பல

சிறுகதைத் தொகுப்புகள்
  • ராஜேஷ்குமார் சிறுகதைகள் - பாகம் - 1
  • ராஜேஷ்குமார் சிறுகதைகள் - பாகம் - 2
  • ராஜேஷ்குமார் சிறந்த சிறுகதைகள்
  • ராஜேஷ்குமார் சிறுகதைகள் தொகுப்பு
  • ராஜேஷ்குமாரின் சிறுகதைத் தொகுதி
  • ராஜேஷ்குமாரின் அற்புதச் சிறுகதைகள்
  • ராஜேஷ்குமார் சிறுகதைத் தொகுதி 1-6 பாகங்கள்
பொது நூல்கள்
  • விரல் (குறு நாவல்)
  • அர்த்தமுள்ள அரட்டை
  • என்னை நான் சந்தித்தேன்
  • எவரெஸ்ட் தொட்டுவிடும் உயரம்தான்
  • சித்தர்களா பித்தர்களா
  • ராஜேஷ்குமார் ராஜ்ஜியம்
  • ராஜேஷ்குமார் கேள்வி பதில்கள்
  • விளக்கம் ப்ளீஸ் விவேக்
  • சார் ஒரு சந்தேகம்
  • வாவ் ஐந்தறிவு
ஆங்கில நூல்கள்
  • Select Crime Thrillers of RAJESHKUMAR Digest 1
  • Select Crime Thrillers of RAJESHKUMAR Digest 2
  • A Divine Revenge
  • The Red Daffodils
  • Not Again
  • One Gram Betrayal
  • The Moonstone Battle
  • Good Morning America
  • Velvet Crimes

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.