மங்கலவள்ளை
மங்கலவள்ளை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். உயர்ந்த குலத்துப் பெண்ணை ஒன்பது வெண்பாக்களினால் பாடுவது மங்கலவள்ளை[1][2][3][4].
அடிக்குறிப்புகள்
- ↑
ஒன்பது வெண்பா வகுப்பால் உயர்குல
மங்கையைப் பாடுவது மங்கல வள்ளை- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 828
- ↑
மாசில் குலமகளை வகுப்பு வெண்பாவினால்
வருபொரு ளுரைத்தலாய் ஒன்பதொன்ப
தாகப் பாடின் மங்கல வள்ளை- பிரபந்த மரபியல் - 13
- ↑
மேற்குலத்திற் பிறந்த மின்னாளை வெண்பா
ஒன்பதாலும் வகுப்பொன்பதினாலும்
வழுத்துவது மங்கல வள்ளை யாகும்.- முத்து வீரியம் 1111
- ↑
கோதிலாக் கற்பிற் குலமகளை - நீதிசேர்
மங்கல வள்ளை வகுப்பொடு வெண்பாவால்
இங்காமொன் பான்என் றிசை- வெண்பாப்பாட்டியல் 54
உசாத்துணைகள்
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
வெளி இணைப்புகள்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.