under review

இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள்-2006

From Tamil Wiki
Revision as of 22:49, 29 June 2023 by Meenambigai (talk | contribs) (Spell Check done)

இலக்கியச் சிந்தனை அமைப்பு பிப்ரவரி 28, 1970-ல் தொடங்கப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இவ்வமைப்பைத் தொடங்கினர். தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டது. சிறந்த சிறுகதையை எழுதிய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.

இலக்கியச் சிந்தனை சிறுகதைகள் பட்டியல்-2006

மாதம் சிறுகதைத் தலைப்பு ஆசிரியர் இதழ்
ஜனவரி தேன்மொழியாள் திருவாரூர் சரவணன் அமுதசுரபி
பிப்ரவரி மலை ஆர்.கே. சண்முகம் தினமணி கதிர்
மார்ச் தூரி கோடாங்கிப்பட்டி புகழேந்தி கல்கி
ஏப்ரல் தரிசனம் உமா கல்யாணி கல்கி
மே கூச்சமில்லாத பேனா! ரிஷபன் கல்கி
ஜூன் வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும் பிரபஞ்சன் தீராநதி
ஜூலை அருவி என். ஶ்ரீராம் தீராநதி
ஆகஸ்ட் நிழல் படிந்த மனம் பாலு சத்யா புதிய பார்வை
செப்டம்பர் அகிம்சை எம்.ஆர். இராஜேந்திரன் கலைமகள்
அக்டோபர் ராஜகுமாரி ஶ்ரீ வேணுகோபாலன் குமுதம்
நவம்பர் யசோதரா திருப்பூர் கிருஷ்ணன் குமுதம்
டிசம்பர் நிலா ரகசியம் சீதா ரவி கல்கி

2006-ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதை

2006-ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக, என். ஸ்ரீராம் எழுதிய ‘அருவி’ தேர்ந்தெடுக்கப்பட்டது. ராஜம் கிருஷ்ணன் இக்கதையைத் தேர்ந்தெடுத்தார். மாதத்தின் சிறந்த சிறுகதையை எம்.பி. சித்ரா தேர்வு செய்தார்.

உசாத்துணை


✅Finalised Page