அஷ்ட வீரட்டானம்

From Tamil Wiki

அஷ்டவீரட்டானம் (அட்டவீரட்டானம், அட்டவீரட்ட லிங்கங்கள்) சிவபெருமானின் எட்டு வீரச்செயல்கள் நிகழ்ந்த எட்டு சைவத்தலங்கள் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன

தத்துவம்

சிவதத்துவத்தில் அஷ்டமூர்த்தம் (அஷ்டமூர்த்தம்) என்னும் கருத்து அடிப்படையானது, ஐந்து பருப்பொருட்கள், சந்திரன், சூரியன், மனம் என்னும் ஆறுவகையில் அருவமான சிவம் உருவம் கொண்டு சிவலிங்கம் ஆகியது. இந்த அடிப்படையில் எட்டு லிங்கங்கள் வெவ்வேறு புராண விளக்கங்களுடன் வழிபடப்படுகின்றன

(பார்க்க அஷ்ட லிங்க வழிபாடு )

எட்டு தலங்கள்

  1. திருக்கண்டியூர்  : பிரம்மன் தலையை கொய்ந்த இடம்
  2. திருக்கோவலூர் : அந்தகாகரனைக் கொன்ற இடம்
  3. திருவதிகை  : திரிபுரத்தை எரித்த இடம்
  4. திருப்பறியலூர்  : தக்கனை அழித்த இடம்.
  5. திருவிற்குடி  : சலந்தராசுரனை கொன்ற தலம்
  6. திருவழுவூர்  : கயமுகாசுரனைக்கொன்று தோலை உரித்துப்போர்த்துக்கொண்ட தலம்
  7. திருக்குறுக்கை  : மன்மதனை எரித்த தலம்
  8. திருக்கடவூர்  : மார்க்கண்டேயனைக் காத்துக் கூற்றுவனை உதைத்த தலம்.