தேவாங்க புராணம்

From Tamil Wiki
Revision as of 06:46, 27 November 2022 by Jeyamohan (talk | contribs)

தேவாங்க புராணம் ( ) தமிழகத்தில் குடியேறிய தேவாங்கச் செட்டியார் குலத்தைப் பற்றிய புராணம். மாம்பழக் கவிராயரால் இயற்றப்பட்டது.போடிநாயக்கனூர் ஜமீன்தாரர் திருவங்காரு திருமலைபோடய காமராசய பாண்டிய நாயக்க துரை ஆதரவில் கோவை தேவாங்க குல குரு ஸ்ரீஸ்ரீசதாசிவானந்த தேசிக சுவாமிகளும், கலப்பதி  ஸ்ரீஸ்ரீதொட்டய்ய தேசிகரும்  சம்ஸ்கிருதத்தில் இருந்து மொழியாக்கம் செய்த தேவாங்கபுராணம் மாம்பழக் கவிராயரால் தமிழில் கவிதையாக ஆக்கப்பட்டது.

எழுத்து, வெளியீடு

எழுத்து

மாம்பழக்கவி சிங்கநாவலர் இந்நூலின் ஆசிரியர். மதுரைக்கு அருகேயுள்ள தேனி மாவட்டம் போடி நாயக்னூரில் வசித்து வந்த தேவாங்க குலத்தினர், தம் குலத்தின் மூலநூலாகிய தேவாங்க புராணத்தினை சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்க விரும்பி போடிநாயக்கனூர் ஜமீன்தாரராகிய திருவங்காரு திருமலைபோடய காமராசய பாண்டிய நாயக்க துரையிடம் தெரிவித்தனர்.அவர் ஏற்பாட்டின்படி கோவை தேவாங்க குல குரு ஸ்ரீஸ்ரீசதாசிவானந்த தேசிக சுவாமிகளும், கலப்பதி  ஸ்ரீஸ்ரீதொட்டய்ய தேசிகரும்  சமஸ்கிருதத்தில் உள்ள தேவாங்க புராணத்தைத் தமிழில் மொழிபெயர்த்தனர். குலவுசெழுங் கோயமுத்தூர்

  வளர்நிதிதே வாங்கர்குல குருவாய் வந்த

நலநளின கமுகசதா சிவானந்த தேசிகனு நாளுமின்ப

  மலியுநகர்க் கலப்பதிவாழ் மூக்கய

        வேள் செல்வன் மனோன்மணி பொற் பாத

சலசமலர் துதியோகி தொட்டயதே

       சிகனுமுன்னூற் றன்மை காட்ட

அரங்கேற்றம்

ழி பெயர்க்கப்பட்ட தேவாங்க புராணத்தை, பழனியில் வசித்த முத்தமிழ் பாகுபாட்டினை உணர்ந்த மாம்பழக் கவிச்சிங்க நாவலர் தமிழில் கவியியற்ற, போடி நாயக்கனூர் ஸ்ரீசவுடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. துதிபெருகப் பாடியதைக்காசை

  வளம் மதியிலருள் சுரந்து வாழும்

முதுமறை வாழ்த்திய சவுடநாயகி

  பொற்கோவிலின் முன்மண்டபத்தின் மன்னோ

காசை நகர் புரக்கும் வங்கார்

   திருமலைப் போடயதுரைகா ரியவல்லோர்கள்

பேசுதமிழ்ப் பாவலர்தே

  வாங்கர்பத்தா யிரங்குலத்தோர் பெரியோர் யாரு

நேசமிகச் சூழ்சபையி ரலங்கேற்றி

  னான்மதுர நிறைந்த கல்வி

வாசமுயர் பழனிவளம் பதிவளர்

  மாம்பழக் கவிஞன் மதிவல்லோனே

என்று இப்புராணத்தின் கடைசியில் பாடப்பட்டுள்ள சாற்றுக் கவி தெரிவிக்கிறது.  இங்கு காசை என்பது இன்றைய போடி நகரைக் குறிக்கும்.  அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தத்தில் பாடப்பட்ட இக்கவிதையை சாமுண்டியாச்சாரியார் எழுதியுள்ளார்.  இதில் பாடப்பட்ட காலம் எது என்ற தகவல் இல்லை. மாம்பழக் கவிசிங்கராயர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இந்நூல் அவர் தேனி சிற்றரசரின் ஆதரவில் இருந்தபோது எழுதப்பட்டிருக்கலாம்.

அச்சுப்பதிப்பு

பழனி மாம்பழக்கவிச் சிங்க நாவலர் இயற்றிய தேவாங்க புராணம் ஓலைச் சுவடியில் இருப்பதைக் கேள்விப்பட்டு கோவையில் புத்தக வியாபாரம் செய்து வந்த திரு.இ.ஒண்ணைய கவுண்டர் என்பவர் அதை வெளியிட்டார். அவர் இந்நூலில் கீழ்க்கண்டவாறு உரைக்கிறார்.

        "அங்ஙனச் செய்யப் பெற்றுள்ள இப்புராணமானது இதுகாறும் அச்சிடாமலும், பெரும்பாலும் அத்தேவாங்க குலத்தினருக்கே தெரியாமலுங் குடத்திலிட்ட விளக்கைப் போல் பிரகாசமின்றி மறைந்து கிடந்தது. மகாவித்துவானாகிய இந்நாவலர் பெருமானியற்றிய பாடல்களைச் சேகரஞ் செய்ய விரும்பிய எனக்கு,இத்தேவாங்க புராணம் அவரால் செய்யப்பட்டுள்ளதென்று சிலரால் கேள்வியுற்று அதனைத் தேட முயற்சி செய்ததில், கோயம்புத்தூரில் வசிக்கும் ஸ்ரீநல்லமலை செட்டியார் அவர்கள் ஓர் பிரதியும், உடுமலைப்பேட்டை ஸ்ரீ பெ.இராமசாமி செட்டியார் அவர்கள் ஓர் பிரதியும் உபகரித்தார்கள்; அப்பிரதிகள் மூலப் பாடமாயிருக்கக் கண்டு கல்வியில் வல்லாரேயன்றி எல்லோருக்கும் பயன்படும் பொருட்டு,கோயம்புத்தூர் காலேஜ் தமிழ்ப் பண்டிதர் ஸ்ரீ.ஆர்.சபாபதிப் பிள்ளையவர்களைக் கொண்டு உரையியற்றுவித்துப் புராணஞ் செய்ய முதல் நூல் காட்டியவருள் ஒருவராகிய சதாசிவ சுவாமிகளவர்களுடைய ஜேஷ்டபுத்திரரும், தேவாங்க குலகுருவுமாகிய சதாசிவமாகிய ஐயரவர்களைக் கொண்டு அம்முதநூலோடு ஒப்பிட்டுப் பார்த்ததில் சில விஷயம் முரண்பட, அம்முரண்பட்ட விஷயங்களுக்கெல்லாம் ஸ்ரீசபாபதி பிள்ளையவர்களைக் கொண்டே சில செய்யுளை நீக்கியும்,வேண்டுமிடங்கட்குப் பொருந்த வேறு சில செய்யுட்களைக் கூட்டியும், திருத்தியும், கோயம்புத்தூர் ஜவுளி வியாபாரஞ் செய்யும் மகாகனம் பொருந்திய வெரிவாட செட்டியாரவர்கள், கிரிய செட்டியாரவர்கள் முதலிய தேவாங்க குல திலகர்களது விருப்பத்தின்படி, அவர்களது திரவிய சகாயத்தை (நிதி உதவி) கொண்டு அச்சிட்டு முடித்து இன்று எல்லோருங் காண வெளிப்படுத்தினேன்" (பதிப்புரை)

இந்நூல் அச்சிடப்பட்ட ஆண்டு விஜய ளூ ஆனி மீ 28 உ என்று மட்டுமே அச்சிடப்பட்டுள்ளது.  இந்நூலில் ஒரு போஸ்ட் கார்டை விட சிறிது பெரிய அளவிலான காகிதத்தில், புஸ்தக இருப்பு குறைவாக உள்ளதாகவும், மறுபதிப்பு செய்வதில்லை என்றும் எனவே, புத்தகம் வேண்டுவோர் உடனடியாகத் தொடர்பு கொள்ளும்படியும், புஸ்தக விலையும், தபால் கூலியுள்பட ஆகும் விலை பற்றியும் அச்சிடப் பட்டு ஒட்டப்பட்டுள்ளது.  அதில், 1894 ளூ ஜனவரி மீ 1 உ என்று குறிக்கப்பட்டுள்ளது.  எனவே, இதிலிருந்து புத்தகம் அச்சிட்டு வெளியிடப்பட்ட வருடம் 1890 க்கு முன்னோ அல்லது 1890 களிலோ இருக்கலாம்.

சாற்றுகவி

இப்புத்தக வடிவிலான பதிப்பிற்கு உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த வித்வான் பு.ப.அ.முத்துச்சாமி செட்டியார் சாற்றுக் கவி பாடியுள்ளளார்.  இந்நூலின் கடைசி பகுதியில் ஒரு அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.  அதில், " தேவாங்க முனிவர் ஏழாவதாரத்திலும் செய்த சாஸ்திரங்கள் இன்னவையென்று பெங்களூரில் வசிக்கும் பிரம்ம ஸ்ரீவேதமூர்த்தி நஞ்சுண்ட தீஷித சுவாமிகளவர்களைக் கொண்டு அருப்புக்கோட்டைக்கடுத்த சின்ன புளியம்பட்டியிலிருக்கும் தேவாங்க குல அபிமானி ஸ்ரீரா.ம.நா.கஉத்தாணு செட்டியாரவர்கள் எழுதி,இத்தேவாங்க புரணத்துடன் சேர்க்கும்படி அனுப்பினார்.அவருடைய இஷ்டப்படியே அச்சாஸ்திர விவரத்தை இப்புராணத்தில் சேர்த்திருக்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உதவியோர்

மேலும் இந்நூல் அச்சிடுவதற்குதப் பொருளுதவி செய்தவர்களின் விபரமும் அச்சிடப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்கள் வருமாறு:

கோயம்புத்தூர் ஸ்ரீ.வெ.வெரிவாட செட்டியார்,

ஜே.தா.இராமசாமி செட்டியார்,

வெ.வெள்ளியங்கிரி  செட்டியார்,

ந.கிரிய செட்டியார்,

சாமிரவுத்து நா.இராமையா செட்டியார்,

உடுமலைப்பேட்டை சாவுகார் ஸ்ரீ இராமலிங்க செட்டியார்,

குமாரர் திருமூர்த்தி செட்டியார்,

மடையாண்டி சாமி செட்டியார்,

சேலம் குகை கொ.ர.தம்மண செட்டியார்(முனிசிபல் கவுன்சிலர்),

செவ்வாய்பேட்டை சேலம் டி.மு.கோ.வக்கீல் கதிரி செட்டியார்,

வைத்தியலிங்கம் செட்டியார்,

திருப்பூர் சவுண்டப்ப செட்டியார்,

எம்.சுப்பிரமணிய செட்டியார்.

நூல் அமைப்பு

ஓலைச் சுவடியில் எழுதப்பட்ட இந்த புராணம் 29 சருக்கங்களாகப் பாடப்பட்டுள்ளது.உரைநடை வடிவம்

உரைநடை வடிவம்

தேவாங்க புராணத்தை உரைநடை நூல் வடிவில் இயற்றியவர் வித்வான் க.பழனிச்சாமி. முதன் முதலில் வெளியிட்ட பெருமை திருப்பூர் திரு.வி.எஸ்.நடராஜ் அவர்களையேச் சாரும். 1971ஆம் ஆண்டு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.இந்நூலுக்கு குமாரபாளையம் தொழிலதிபர் திரு.ஜே.ஜே.கே.அங்கப்ப செட்டியார் அணிந்துரை எழுதியுள்ளார்.கோவை கம்மவார் அச்சகத்தில் இருந்து இந்நூல் விரோதி கிருது ஆண்டு சித்திரைத் திங்களில் வெளியிடப்பட்டது. இந்த நூலைக் கன்னடத்திலிருந்து மொழிபெயர்த்தவர் ஜலகண்டாபுரம் தேவாங்க குல குரு ஓம்ஸ்ரீசாம்பலிங்க மூரத்தி சுவாமிகள்.மொழி பெயர்ப்பில் அவருக்குத் துணை நின்ற அவர்தம் குமாரர் ஸ்ரீவித்யாசாகர மூர்த்தி. தெலுங்கு மொழிபெயர்ப்பை செய்தவர் படைவேடு குருநாதர் சென்னா ஓம் ஸ்ரீசாம்பலிங்க மூர்த்தி சுவாமிகள் செய்து உதவினார்.  இந்நூல் முதற்பதிப்பாக வெளியிடப்பட்ட ஆண்டு 1971