being created

பொதுக்கயத்துக் கீரந்தை

From Tamil Wiki
Revision as of 20:59, 12 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Reset to Stage 1)

பொதுக்கயத்துக் கீரந்தை, சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் இவரது ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

பொதுக்கயத்துக் கீரந்தை என்பதில் கீரந்தை என்பது இவரது இயற்பெயர் ஆகும். கயம் என்றால் குளம். பொதுக்கயம் என்பது ஊரின் பெயர். இன்றும் பெரிய குளம், தாமரைக் குளம் என்று ஊர்களின் பெயர் வழங்குதலை ஒப்பிட்டு நோக்கலாம்.

இலக்கிய வாழ்க்கை

பொதுக்கயத்துக் கீரந்தை இயற்றிய பாடலாக சங்கத் தொகை நூலான குறுந்தொகையின் 337 - வது பாடல் இடம் பெற்றுள்ளது.

பாடலால் அறியவரும் செய்திகள்

குறுந்தொகை 337
  • குறிஞ்சித்திணை, தலைவன் கூற்று
  • தோழியை இரந்து பின் நின்ற தலைவன் தனது குறை அறியக் கூறியது
  • தலைவிக்கு முலைகள் அரும்பின, தலையில் கிளைத்த மெல்லிய மயிர்க்கொத்துக்கள் கீழே தாழ்ந்தன, செறிந்த வரிசையாகிய வெண்பல்லும் முதன்முறை விழுந்து முற்றும் முளைத்து நிரம்பின, தேமலும் சில வெளிப்பட்டன. அவளின் அழகை அவள் அறியவில்லை. ஆனால் அவ்வழகு என்னை வருத்தியது எனத் தலைவன் கூறுகிறான்

பாடல் நடை

குறுந்தொகை 337


முலையே முகிழ்முகிழ்த் தனவே தலையே
கிளைஇய மென்குரல் கிழக்கு வீழ்ந் தனவே
செறிநிரை வெண்பலும் பறிமுறை நிரம்பின
சுணங்குஞ் சிலதோன் றினவே யணங்குதற்
கியான்ற னறிவலே தானறி யலளே
யாங்கா குவள்கொ றானே
பெருமுது செல்வ ரொருமட மகளே.

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.