under review

பதிற்றுப்பத்தந்தாதி

From Tamil Wiki
Revision as of 20:14, 26 September 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)

பதிற்றுப்பத்தந்தாதி (18ம் நூற்றாண்டு) பழனித் திருவாயிரத்தில் இடம்பெற்றுள்ள நூல்களுள் ஒன்று. நூறு பாடல்களைக் கொண்டது. இதன் ஆசிரியர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.

நூல் அமைப்பு

பதிற்றுப்பத்தந்தாதியில் நூறு பாடல்கள் இடம்பெற்றன. பத்துப் பாடல்களுக்கு ஒரு யாப்பாக பத்துவித யாப்பில், நூறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

உள்ளடக்கம்

பதிற்றுப்பத்தந்தாதியில் கீழ்க்காணும் பத்து வித யாப்புகளைக் கொண்டு பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முருகப்பெருமானின் சிறப்பு, பெருமை, அருள் ஆகியன பல பாடல்கள் மூலம் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.

பாடல்

காவல்செய்தெனைக் கலந்தருள்கடமையொன் றிருந்தும்

பாவமானிட ரிடமிரந்திடவிடப் படுமோ

தேவரூர்புகழ் சேவகமிருந்துமா முனிபோன்

மூவறீர்தரு பழனிவெற்பமர்ந்தமுன் னவனே


உற்றமாற்றமோ ராயிரமுரைத்தனை யுணர்ந்துங்

குற்றமுஞ்செயுந் துணிவினேற்கருள்செயாய் கொல்லோ

நெற்றடம்பணைப் பழனியிற்சந்தத நின்று

கொற்றமார்விளை யாடல்செய்கோமளக் குகனே


புனையுமுத்தமிழ்க் குறுமுனிக்குதவுமெய்ப் பொருளருளெனநாளு

நினையுமென்னையிப் புவியில்வள்ளுரநுகர் நீசருநகலாமோ

வனையைவேலுரு வாச்சமைத்தணிந்துள வசலமெங்கணுமாடித்

தனையலாலிணை தவிர்பழனாபுரித் தடங்குவட்டுறைவானே.

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.