being created

கையறு நிலை(பொதுவியல் திணை)

From Tamil Wiki
Revision as of 10:27, 20 June 2025 by Jayashree (talk | contribs)

கையறு நிலைபொதுவியல் திணையின் துறைகளில் ஒன்று. கையறு நிலை என்பது ஒன்றும் செய்யவியலாத நிலை. இறந்தவரைக் குறித்து செயலற்று வாடுதலலும், இறந்தவனுடைய புகழை அன்பு காரணமாகக் கூறுவதும் கையறு நிலை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் இரு கொளுப்பாடல்கள் கையறு நிலையின் இலக்கணத்தைக் கூறுகின்றன.

கொளு 1

வீரக் கழல் அணிந்த மன்னன் இறந்தானாக, அவனால் புரக்கப்பட்டோர் வருந்தி உரைத்துச் செயலற்று இருத்தல்

செய்கழல் மன்னன் மாய்ந்து என சேர்ந்தோர்
கையற உரைத்துக் கை சோர்ந்தன்று(கொளு 11.14 )

வெண்பா

தாய் அன்னான் தார் விலங்கி வீழத் தளர்வொடு
நீ என்னாய் நின்றாய் நெஞ்சளியை - ஈஎன்றார்க்கு
இல்என்றல் தேற்றா இகல்வ வெய்யோன் விண்படரப்
புல் என்ற நாப் புலவர் போன்று (267)

பொருள்: ஈ’ என இரந்தோர்க்கு இல்லை என்ற வார்த்தையைச் சொல்லாத தாய் போன்ற அரசன், மாற்றாரோடு பொருது மறைந்தான். நீ என்னவானாய் நெஞ்சே

கொளு 2

இறந்தவனுடைய புகழை அன்பு காரணமாகச் சொல்லினும் அதுவும் கையறு நிலை.

கழிந்தோன் தன் புகழ் காதலித்து உரைப்பினும்
மொழிந்தனர் புலவர் அத்துறை என்ன(கொளு 11.15 )

வெண்பா

நின்று நிலமிசையோர் ஏத்த நெடு விசும்பில்
சென்று கழிந்தான் செருவெய்யோன் - என்றும்
அழலும் கதிர் வேல் அவன்பமுகழ் பாடி
உழலும் உலகத்து உயிர் (268)

பொருள்: உலகிலுள்ளோர் புகழ வானுலகம் சென்றான். அவனது புகழைப் பாடி இவ்வுயிர் உழலும்.

  • புறநானூறு 65 - சேரமான் பெருஞ் சேரலாதன் சோழன் கரிகாற் பெருவளத்தானோடு போரிட்டு, புறப் புண் நாணி, வடக்கிருந்தானைக் கழாத்தலையார் பாடியது.
  • புறநானூறு 112- பாரி மகளிர் பாடியது.
  • புறநானூறு 113- அவன் மகளிரை அந்தணர் பாதுகாப்பில் விடச் செல்லும்போது பறம்பு விடுத்த கபிலர் பாடியது.
  • புறநானுஉறு 114 -கபிலர் பாரியை எண்ணி இரங்கிப் பாடியது
  • புறநானூறு 115- கபிலர் பாரி உயிரோடு இருந்த பொழுது பறம்பு மலையின் சிறப்பை நினைத்து வருந்திப் பாடியது புறநானூறு 116 -பாரி மகளிரின் நிலை கண்டு கபிலர் பாடியது
  • புறநானூறு 117- பாரி இருந்த பொழுது வளமாக இருந்த பறம்பு நாடு அவன் இறந்த பிறகு வளம் குன்றியதைக் கண்டு மனம் கலங்கிப் பாடியது
  • புறநானூறு 118- பறம்பு மலை பாதுகாவலின்றி அழிவதைக் கண்டு கபிலர் வருந்திப் பாடியது\
  • புறநானூறு 119- பறம்பு நாட்டின் அழிவு கண்டு கலங்கும் கபிலர், முன்பு அந்நாடு வளமாக இருந்ததையும் பாரியின் வள்ளல் தன்மையையும் நினைவு கொண்டு பாடியது
  • புறநானூறு 120- பறம்பு நாடு அழிதுவிடுமோ என்னும் அச்சத்தில் கபிலர் பாடியது
  • புறநானூறு 217 - வடக்கிருந்த பிசிராந்தையாரைக் கண்டு பொத்தியார் பாடியது
  • புறநானூறு - 218-வடக்கிருந்த பிசிராந்தையாரைக் கண்டு கண்ணகனார் பாடியது

உசாத்துணை

பொதுவியல் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.