under review

கீரங்கீரன்

From Tamil Wiki
Revision as of 03:44, 7 May 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)

கீரங்கீரன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

கீரங்கீரன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கீரன் என்னும் இயற்பெயர் உடையவர். கீரன் என்பவரின் மகன்

இலக்கிய வாழ்க்கை

கீரங்கீரன் பாடிய பாடல் நற்றிணையில் 78 -ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. திருமணத்திற்காக பொருளீட்டச் சென்ற தலைவன் திரும்பி வருதலைக் கண்ட தோழி தலைவியிடம் நம் துயரம் நீங்கியது என பொருள்படும்படி உரைப்பதாக நெய்தல் திணையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • கடல் நீர் பாயும் உப்பங்கழிகளில் கொம்புள்ள சுறாக்கள் நீந்தும்.
  • உப்பங்கழியின் பக்கத்திலுள்ள புன்னை மரங்களின் பூக்கள் பூத்து மகரந்தங்கள் காற்றில் பறக்கும். புன்னை மரத்தின் அடியில் இருக்கும் உப்பங்கழியின் சேற்று கதுப்பில் நீல நிற நெய்தல் பூக்கள் பூத்திருக்கும். தாழை மலர்கள் மடல் அவிழ்ந்திருக்கும். புன்னை மலரின் மகரந்தங்கள் தாழை மலர்கள் மேல் படிந்திருக்கும்.
  • ஆடவர் பொருளீட்டி திரும்பி வரும் தேரானது குதிரைகள் பூட்டப்பட்டு பொன் முதலான பொருள்களுடன் வீடு திரும்பும்.
  • உவமைகள்: தேரை இழுக்கும் குதிரைகளின் பாய்ச்சலினால் சேற்றில் சக்கரங்களால் பள்ளம் விழுந்தாலும் குதிரைகள் வானில் பறக்கும் பறவைகளின் வேகத்தில் அவற்றை கடந்து செல்லும்.

பாடல் நடை

நற்றிணை - 78

  • திணை: நெய்தல் கூற்று: வரைவு மலிந்தது

கோட் சுறா வழங்கும் வாள் கேழ்இருங் கழி
மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய,
பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம்,
வீழ் தாழ் தாழைப் பூக் கமழ் கானல்,
படர் வந்து நலியும் சுடர் செல் மாலை,
நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம்;
கேட்டிசின்-வாழி, தோழி!-தெண் கழி
வள் வாய் ஆழி உள் வாய் தோயினும்,
புள்ளு நிமிர்ந்தன்ன பொலம் படைக் கலி மா
வலவன் கோல் உற அறியா,
உரவு நீர்ச் சேர்ப்பன், தேர்மணிக் குரலே!

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-May-2025, 13:11:24 IST