being created

முதலாழ்வார்கள்

From Tamil Wiki
tettnpsc.com

திருமாலைத் தமிழ்ச் செய்யுள்களால் பாடிய பன்னிரண்டு வைணவ அடியார்கள் ஆழ்வார்கள் என அழைக்கப்படுகின்றனர். பன்னிருவரில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் முதலாழ்வார்கள் என அழைக்கப்படுகிறார்கள். திருக்கோவலூரில் ஓர் வீட்டின் இடைகழியில் இவர்களின் சந்திப்பில் நாலாயிர திவ்யப் பிரபந்தம் பிறந்தது.

  • பொய்கையார், பூதத்தார், பேயார் ஆகிய மூவரும் முறையே அடுத்தடுத்த மூன்று நாட்களில் அவதரித்தார்கள். இவர்கள் த்வாபர யுக முடிவுக்கும் கலியுக ஆரம்பத்திற்கும் இடையிலான யுக சந்தியில் அவதரித்தார்கள். (யுக சந்தி – யுக மாற்றம் ஏற்படும் இடைவெளிக்காலம் – விவரத்திற்கு கட்டுரையின் கடைசியில் காண்க)
  • இவர்கள் மூவருமே அயோனிஜர்கள் – அதாவது தாயின் கருவிலிருந்து பிறவாதவர்கள். இவர்கள் எம்பெருமானின் தெய்வீகக்  கருணையால் பூவிலிருந்து தோன்றினர்.
  • இவர்கள் பிறந்ததிலிருந்தே எம்பெருமான் மீது மிகுந்த பற்று கொண்டவர்கள் – எம்பெருமானால் பரிபூரணமாக அனுக்கிரகிக்கப் பட்டு, நாள் திங்கள் ஊழிதோறும் (ஸர்வ காலமும்) பகவத் அனுபவத்தில் திளைத்திருந்தவர்கள்.
  • வாழ்வின் ஒரு தருணத்தில் சந்தித்துக் கொண்ட இவர்கள் மூவரும், அப்போதிலிருந்து ஒன்றாகவே தங்கவும், பற்பல திவ்ய தேஶங்களுக்கு பயணிக்கவும் செய்தனர். இவர்கள் “ஓடித் திரியும் யோகிகள்“ – அதாவது எப்போதும் யாத்திரை செய்பவர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

மூவரின் பிறப்பு

. முதலாழ்வார் மூவரும் சித்தத்திரி வருடம் ஐப்பசி மாதம் அடுத்தடுத்த தினங்களில் பிறந்ததாகக் கூறப்படுகிறது. மணவாள மாமுனிகளின் உபதேச ரத்தின மாலை இதைக் குறிப்பிடுகிறது.மூவருமே தம் பெற்றோரால் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகள். அயோநிஜர்கள் (கருவறையிலிருந்து பிறக்காதவர்கள்) என அழைக்கப்பட்டவர்கள்.

ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம்” இவை

ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் – எப்புவியும்

பேசுபுகழ் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்

தேசுடனே தோன்று சிறப்பால்!

பொய்கையாழ்வார் திருமாலின் திருக்கரத்தில் உள்ள சங்கின் அம்சமாக ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தில், பொற்றாமரை மலரில் அவதரித்தார்.

மறு நாள் அவிட்ட நட்சத்திரத்தில் திருமாலின் கதாயுதத்தின் அம்சமாக மாமல்லபுரத்தில் நீலோற்பல மலரில் (குருக்கத்தி மலரில்) பூதத்தாழ்வார் அவதரித்தார்.

அதற்கும் அடுத்த நாள் சதய நட்சத்திரத்தில் பெருமாளின் வாளின் அம்சமாய் மயிலாப்பூரில் உள்ள கிணற்றில் செவ்வல்லி மலரில் பேயாழ்வார் அவதரித்தார்

திருக்கோயிலூரில் சந்திப்பு

பாட்டுக்கு உரிய பழையவர் மூவரைப் பண்டு ஒருகால்

மாட்டுக்கு அருள் தரும் மாயன் மலிந்து வருத்துதலால்

நாட்டுக்கு இருள்செக நான்மறை அந்தி நடை விளங்க

வீட்டுக்கு இடைகழிக்கே வெளிகாட்டும் அம்மெய்விளக்கே

தேசிக பிரபந்தம்





நீயும் திருமகளும் நின்றாயால்,*  குன்றுஎடுத்துப்-

பாயும்*  பனிமறுத்த பண்பாளா,* – வாசல்-

கடைகழியா உள்புகா*  காமர்பூங் கோவல்*

இடைகழியே பற்றி இனி









🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.