under review

கிருஷ்ணமூர்த்தி

From Tamil Wiki
Revision as of 12:11, 17 November 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected Category:எழுத்தாளர்கள் to Category:எழுத்தாளர்Corrected Category:சிறுகதையாசிரியர்கள் to Category:சிறுகதையாசிரியர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
XYZ என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: XYZ

To read the article in English: Krishnamurthy. ‎

கிருஷ்ணமூர்த்தி

கிருஷ்ணமூர்த்தி (பிறப்பு: பிப்ரவரி 21, 1994) எழுத்தாளர். சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

கிருஷ்ணமூர்த்தி சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில், கணபதி சுப்ரமணியத்திற்கும், ரமாலக்ஷ்மிக்கும் பிப்ரவரி 21, 1994-ல் மகனாகப் பிறந்தார். சேலத்திலுள்ள புனித ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பள்ளி கல்வி பயின்றார்.கோவையில் நேரு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (Nehru Institute of technology) இளங்கலைப்பட்டம் பெற்றார். கயல்விழியை மார்ச் 10, 2019-ல் திருமணம் செய்து கொண்டார். ஆதிரன் என்ற மகன் உள்ளார். சென்னையில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக அசோகமித்திரன், நகுலன், சாரு நிவேதிதாவைக் கூறுகிறார். கிருஷ்ணமூர்த்தியின் முதல் படைப்பு ’பிருஹன்னளை’ என்ற நாவல் 2013-ல் வெளிவந்தது. குடும்ப அமைப்பிற்குள் இயல்பாக உள்ள அதிகாரச் சிடுக்குகளை நுட்பமாக கதைகளில் அதிகமாகக் கையாள்பவர். மத்திய வர்க்க வாழ்க்கை அவரின் கதைக்களமாக பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

விருதுகள்

நற்றிணை பதிப்பகம் நடத்திய ப.சிங்காரம் நினைவு நாவல்போட்டியில் "அஞ்ஞாதவாசத்தின் ஆரம்ப நாட்கள்" என்ற நாவல் மூன்றாம் பரிசு வென்றது.

இலக்கிய இடம்

தமிழ்ச்சிறுகதைகளிலும் நாவல்களிலும் நேர்கோடற்ற கதைப்பாணியையும், மாய யதார்த்தத்தன்மை கொண்ட புதியவகை கதைசொல்லும் முறையையும் உருவாக்கும் எழுத்தாளராக கிருஷ்ணமூர்த்தி கருதப்படுகிறார்.

நூல்கள்

நாவல்
  • பிருஹன்னளை
  • அஞ்ஞாதவாசத்தின் ஆரம்ப நாட்கள்
  • பாகன்
சிறுகதைகள்
  • சாத்தானின் சதைத் துணுக்கு
  • காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு

வெளி இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:32:15 IST