under review

குமரிமைந்தன்

From Tamil Wiki
Revision as of 12:12, 17 November 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected Category:தமிழறிஞர்கள் to Category:தமிழறிஞர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
குமரி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: குமரி (பெயர் பட்டியல்)

To read the article in English: Kumarimainthan. ‎

குமரிமைந்தன்

குமரிமைந்தன் (1937 - ஜூன் 3, 2021) தமிழறிஞர், பண்பாட்டு ஆய்வாளர், தமிழ்த்தேசியச் செயல்பாட்டாளர். குமரிமைந்தன் தமிழகம் தொன்மையான தனிப்பண்பாடு கொண்ட தனித்தேசியம் என்றும், அது தனிநாடாக நீடிக்கவேண்டும் என்றும், அதன் பொருளியல் வளமும் பண்பாட்டு மரபும் இந்திய ஒன்றியத்தால் அழிக்கப்படுகின்றன என்றும் வாதாடியவர்

பிறப்பு, கல்வி

குமரிமைந்தனின் இயற்பெயர் பெரியநாடார். 1937-ல் குமரிமாவட்டம் தெற்கு சூரன்குடியில் பிறந்தார். பொறியியல் படிப்பை சென்னையில் முடித்தார்.

தனிவாழ்க்கை

1960 முதல் 1984 வரை 24 ஆண்டுகள் தமிழகப் பொதுப் பணித்துறையில் பிரிவு அலுவலராக (இளம் பொறியாளராக)ப் பணியாற்றினார். பின்பு விருப்ப ஓய்வுப் பெற்றுச் சொந்தத் தொழில் செய்தார்.

செயல்பாடுகள்

தெற்குசூரங்குடியிலும் பின்னர் மதுரையிலும் தமிழக பொருளியல் உரிமைக் கழகம் என்னும் அமைப்பை நிறுவி நூல்களையும் துண்டுப்பிரசுரங்களையும் வெளியிட்டுவந்தார்.

பங்களிப்பு

குமரிமைந்தன் தேவநேயப் பாவாணரின் சிந்தனைமரபைச் சேர்ந்தவர். பொருளியல் சார்ந்து தமிழர் உரிமைகளைப் பேணிக்கொள்வது, மொழியின் வழியாக தமிழ்ப்பண்பாடு மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை எதிர்கொள்வது ஆகிய இரண்டும் தன் பணிகள் என கருதினார். தமிழர் வரலாற்றை குமரிக்கண்டத்தில் இருந்து தொடங்கவேண்டும் என்றும், தமிழின் தனித்த இலக்கண அமைப்பும் சொற்களஞ்சியமும் பேணப்படவேண்டும் என்றும் கருத்து கொண்டிருந்தார்.

மறைவு

குமரிமைந்தன் ஜூன் 3, 2021-ல் மதுரையில் காலமானார்

நூல்கள்

  • குமரிக்கண்ட வரலாறும் அரசியலும்
  • சாதி வரலாற்றுக்கு ஒரு பதம்: நாடார்களின் வரலாறு
  • இராமர் பாலப் பூச்சாண்டி
  • பாழ்பட்டுக் கிடக்கும் தமிழகக் கடற்கரை

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:32:28 IST