செங்கை மு.ராஜு செட்டியார்
- ராஜு என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ராஜு (பெயர் பட்டியல்)
- செட்டியார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: செட்டியார் (பெயர் பட்டியல்)
செங்கை மு.ராஜு செட்டியார் தமிழில் வாசிப்பு தொடங்கிய காலகட்டத்தில் பொதுவாசிப்புக்குரிய நாவல்களை எழுதிய எழுத்தாளர். 1925 முதல் 1935 வரை இவர் தொடர்ச்சியாக தொடர்கதைகளையும் நாவல்களையும் எழுதிவந்தார். இவருடைய பெரும்பாலான நாவல்கள் நீளமானவை. சமூகப்பிரச்சினைகளை புனைவின் சிக்கல்களாக ஆக்குபவை
இலக்கியப்பார்வை
செங்கை மு.ராஜு செட்டியாரின் காலகட்டத்தில் நாவல்கள் வாசிப்பது ஒழுக்கக்கேடு என்னும் பார்வை உருவாகி வந்திருந்தது. அதை அவர் தன் சந்திரசேகரி என்னும் நாவலில் விமர்சிக்கிறார். குணாவதி என்னும் நாவலாசிரியை அதன் நாயகி. அவள் 'நாவல்கள் எழுதுவதற்கு உலகானுபவம் வேண்டும் என்பது உண்மை.கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு நாவலுக்கான விஷயம் ஏற்படும்’ என்கிறாள். அன்று அத்தனை நாவல்களிலும் காதல் என்பது ஓர் உயர்ந்த இலட்சியமாக முன்வைக்கப்பட்டிருந்தபோது காதல்மணம் என்பது அவ்வளவு சிறந்த ஏற்பாடல்ல என்று காதலி என்னும் நாவலில் கூறுகிறார்
இலக்கியஇடம்
தமிழில் வணிகமதிப்பு கொண்டிருந்த எழுத்தாளர். பின்னாளில் உருவான பல வணிக எழுத்துக்களின் முன்னோடி. அக்காலத்தைய சமூகச் சித்திரங்கள் இவர் ஆக்கங்களில் உள்ளன
நாவல்கள்
- ஞானகாந்தி
- காதலி
- அன்பானந்தம்
- சந்திரசேகரி
- நாகரீகம்
- குசாவதி
உசாத்துணை
- தமிழ்நாவல்- சிட்டி- சிவபாதசுந்தரம். கிறிஸ்தவ இலக்கியசங்கம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:34:12 IST