under review

மைத்ரி

From Tamil Wiki
Revision as of 14:17, 17 November 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected Category:நாவல்கள் to Category:நாவல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மைத்ரி (2022) அஜிதன் எழுதிய முதல் நாவல். இமையமலைச் சாரலில் நிகழும் ஒரு காதல்கதை, அதன் வழியாக சிவசக்தி லயத்தை முன்வைக்கிறது.

வெளியீடு

அஜிதன் இந்நாவலை 2022-ல் தன் தந்தை ஜெயமோகன் 60 ஆண்டு நிறைவை ஒட்டி எழுதினார். நாவலை விஷ்ணுபுரம் பதிப்பகம் வெளியிட்டது.

கதைச்சுருக்கம்

தாயை இழந்த ஹரன் என்னும் இளைஞன் இமையமலைச்சாரலில் ஒரு பயணத்தில் மலைப்பழங்குடிப் பெண் ஒருத்தியைச் சந்திக்கிறான். குறுகிய பொழுதில் ஒரு காதல் உருவாகிறது. அவளுடன் அவள் சிற்றூருக்குச் செல்லும் ஹரன் அங்கே இமையமலையின் ஆழத்திலுள்ள அமைதியை கண்டடைகிறான்.

மதிப்பீடு

"ஒரு சாதாரணக் காதல் கதைதான். ஒவ்வொரு வரியும் கவிதையாக புத்தகம் விரிகிறது. நாவல் படிக்கும் இன்பமும், கவிதை படிக்கும் சுகமும் ஒருங்கே கிடைப்பது புது அனுபவம்." என மைத்ரி நாவல் பற்றி அ. முத்துலிங்கம் மதிப்பிடுகிறார்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Jun-2023, 16:42:52 IST