being created

மு. சுயம்புலிங்கம்

From Tamil Wiki
Revision as of 16:12, 28 May 2024 by Ramya (talk | contribs)

மு. சுயம்புலிங்கம் (1944 - 1980-கள்) தமிழ்க் கவிஞர், சிறுகதையாசிரியர். கரிசல் வட்டார எழுத்தாளர். இடதுசாரி சிந்தனை கொண்ட கவிதைகளை எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

மு. சுயம்புலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடை கிராமத்தில் முனியசாமி நாடார், பெரிய பிராட்டி இணையருக்கு 1944-ல் பிறந்தார். பிழைப்பு தேடி சென்னை வந்தார். தி.க.சிவசங்கரன், ‘சிகரம்’ செந்தில்நாதன், ‘கார்க்கி’ இளவேனில், சுப்ரமண்ய ராஜு ஆகியோர் இவரின் நண்பர்கள். இவர்களின் வழியாக இலக்கிய அறிமுகம் பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

மு. சுயம்புலிங்கம் எழுபதுகளில் எழுதத் தொடங்கினார். ‘தாமரை’ இதழில் இவரது முதல் படைப்பு வெளிவந்தது. கோணங்கியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ’கல்குதிரை’ என்ற சிற்றிதழில் ஆரம்பக் காலங்களில் எழுதி வந்தார். தமிழின் வட்டார வழக்கான கரிசல் மொழியில் உள்ள இவரது படைப்புகள் இலக்கிய உலகில் கவனம்பெற்றன.

இலக்கிய இடம்

மு.சுயம்புலிங்கத்தின் மொழி கரிசல் நிலத்தின் வட்டார வழக்கிலானது. நெருக்கடி நிலைக்குப் பிறகான கரிசல் நிலத்தையும், அதன் வறுமையையும் தன் மொழியின் மூலம் காட்சிப்படுத்தினார். சுயம்புலிங்கத்தின் கவிதைகளில் தீர்க்கமான அரசியல் பார்வை இருந்தது.

விருதுகள்

  • தமிழ் இந்து இதழின் யாதும் ஊரே நிகழ்வில் தமிழ்திரு 2023 விருது பெற்றார்.

நூல் பட்டியல்

கவிதைத்தொகுப்புகள்
  • நிறம் அழிந்த வண்ணத்துப் பூச்சிகள்
  • தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்
கதைத் தொகுப்புகள்
  • ஒரு பனங்காட்டு கிராமம்
  • நீர்மாலை
  • ஊர்க்கூட்டம்
  • நாட்டுப்பூக்கள் (கல்குதிரை தொகுப்பு)

உசாத்துணை

  • யாதும் தமிழே - தமிழ் திரு விருதுகள் 2023 | ஆளுமைகளைப் போற்றுவோம் - இந்து தமிழ்திசை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.